பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ அ திருக்கோவையார் உரைநடை வாட்டத்தை எதல்ை இவள் வாடியது எனத் தோழி வினவி உணர்தல். 1. வாட்டம் வினுதல் (62. கிருத்தம்) ‘எம்பெருமான் (தலைவன்) என் பொருட்டு இடர்ப் பட்டு நிற்கின்ருன்,' எனத் தலைமகள் வருந்துவதைக் கண்டு 'சுனை நீராடிச் சிலம்பிற்கு எதிரழைத்து வருத்தம் செய்யும் விளையாட்டைப் பயின்ருே, வேறு காரணத் தாலோ, நீ வாடியது என்னே' எனத் தோழி தலைமகளது வாட்டத்தை வினவினள். - குறிப்பு:- சு. முன்னுறவுணர்தல்' என்னும் இவ் அதி காரம் 1. வாட்டம் விதைல் என்னும் 1 துறையைக் கொண்டு முடிகின்றது. எ. குறையுற உணர்தல் குறையுற உணர்தல் என்பது தலைமகன் குறை யுறத் தோழி அதனைத் துணிந்து உணர்தல். 1. குறையுற்று நிற்றல் (63. மடுக்கோ) தலைமகளது வாட்டம் கண்டு ஐயுற்று நின்ற தோழியிடம் சென்று நான் உங்களுக்கு எல்லாத் தொழிலும் செய்ய வல்லேன்; கடலில் படகைச் செலுத் துவேன்; கடலிற் புக்கு மீன் பிடிப்பேன்; ஒரு குளிப்பில் பல சங்குகளை எடுப்பேன்; தில்லை முற்றத்தில் எல்லாரும் காணச் சங்க வளைகளை விற்பேன்; நும் ஐயன்மார்க்குப் பொருந்தின குற்றேவல்களைச் செய்வேன்; நல்ல மலர்களை நும் கூந்தலுக்குத் தொடுப்பேன்; உங்களுக்கு வேண்டியதைச் சொல்லுங்கள்' என்று தலைமகன் தன் குறையைக் கூறினன்.