பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அ திருக்கோவையார் உரைநடை

நுமது அருள் கிடக்க, மடலேறுவார் யாழ் ஓசையைக் கற்ற மென் மொழிக் கன்னியின் அன்னம் போன்ற நடையை (அது எழுத வராது) எழுதுகிற சித்திரங் களும் உண்டோ? உன்னுடைய சித்திரச் சாலையிடத்து; நுமக்கு அவள் மொழிநடை எழுத முடியாது ஆதலின் நீயிர் மடலெழுதுதல் எப்படி?' எனக் கூறி மடலெழுது தலை விலக்க முயன்ருள்.

7. அவயவம் எழுதல் அரிதென விலக்கல் (79. யாழும்) தலைவியின் மொழிநடை கிடக்க, அவள் மொழி யோடு ஒக்கும் யாழையும் எழுதி (மொழியின் இனி மையை எழுதி) முறுவலான அவளுடைய முத்துக்களே எழுதி, (அழகிய பல்வரிசையை எழுதி,) கூந்தலாகிய இருளின் கண் மெல்லிய பூச்சூழலையும் எழுதி, வாயாக ஒரு தொண்டைக் கனியையும் எழுதி, (கண்ணுகிய) இளமாவடு வகிரையும் எழுதி, அங்ங்னம் இவையெல் ல்ாம் எழுதப்பட்ட ஒரு வஞ்சிக் கொம்பு எழுதியுள்ள படத்தைக் கொண்டுவர முடியுமாயின் அங்ங்னே கொண்டு வந்து எம் ஊர்க்கண் மடலேற வாரும்’ என்று தோழி கூறினள். 8. உடம்படாது விலக்கல் (80. ஊர்வாய்) அங்ங்னம் எழுதலாகாமையைக் கூறிய தோழி 'அது கிடக்க, நூம்மை யாம் விலக்குகின்றேம் அல்லேம்; தலைவ! நீ மடல் ஊர்வையோ, அன்றி ஒழிவாயோ, உன் கருத்தை யாம் திருத்த இருந்தேம் அல்லேம்; உன் விருப்பத்தைத் தலைவியிடம் அவள் ಫೆ. வண்ணம் சிலவற்றைக் கற்பித்துச் சொல்லிப் பார்க்கிறேன்; அவள் அதற்கு இடம் தருவாளோ யார் அறிவார்? தாராளாயின் பின்பு நீ அறிந்த வற்றைச் செய்வாயாக' என்று மடலேறுவதை விலக்கினள். (நான் போய் அவள் நினைவு அறிந்து வருவேன், அதுவரையில் நீ வருந்தாது ஒழி என்றது கருத்து) H