பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. அா திருக்கோவையார் உரைநடை வாடாத தழையை உடையவன், முருகனே, காமனே தெரியவில்லை. அவன் தம் புனத்தைவிட்டுப் பிரியான்; ஒன்றும் உரையான், அஃதென்ன மாயமோ அறிகிலேன்' என்று தோழி தலைவியிடம் மென்மொழியால் பக்குவ மாகக் கூறினுள். 3. விரவிக் கூறல் (84. நீ கண்டனை) அங்ங்னம் கூறிய தோழி வன்மொழியால் கூறின் மனம் மெலியும் என்று அஞ்சி, 'ஒரு ஆண் நண்டு. தன் பெடையின் வாயில் ஒரு நாவல் பழத்தைக் கொடுப்பதைக் கண்ட (முருகவேள் போல்வான்) ஒருவன் பேயைக் கண்டாற்போல வேறுபாடு உடையவனுய்த் தன் உணர்வு இழந்து நின்ருன்; அந்நிலையை நீ கண்டாயாயின் உயிர் வாழமாட்டாய், யான் வன் கண்மையேன் ஆதலின், அதனைக் கண்டும் ஆற்றி யுளேன் ஆயினேன்' என மென்மொழியோடு சிறிது வன்மொழியும் விரவிக் கூறினள். 4. அறியாள் போறல் (85. சங்கம்) பேய்கண்டாற்போல நின்ருன் எனத் தலைமகன் நிலையைக் கேட்ட தலைமகள் பெரு நாணினள் ஆதலின் அதனை அறியாதாளைப் போல ஏந்திழாய்! பல பெரிய மரக்கலங்களைப் பெற்ற இக்கடல் தில்லைவானவனும் சிவனை ஒக்கும்; அஃது எப்படியெனில் சிலேடை யினலே ஒக்கும். எங்னம் எனில் : 'கடலானது சங்கு தரும் முத்துக்களை முத்துக் குளிப்பாரே அன்றி நாமும் பெறும்படி மிக்க கழிகளை உடையதாய்; மிக்க நன்னிரைக் கொண்ட கங்கை தன்னிடம் சேரப் பெற்றதாய்; பாருகிய மரக்கலங்கள் இயங்கப் பெற்றதாய் விளங்கும். அதுபோலத் தில்லை வானவனுகிய சிவனும் அன்பு தருகிற முத்தியை அன்பிலாத நாமும் o பெறும்படி ஆகாயத்தையும் கழிந்ததுள்ளதான திருவடியை உடைய ஒரு வடிவை