பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. சேட்படை 2ட அடி !ெ ப, மையும், தனது முயற்சியின் அருமையும் தோன் றம்படி இதுவே புணர்ச்சியாக நீட்டியாது விரைய மாந்து கொள்ள வேண்டித் தலைமகனிடம் தோழி: ம1)த் துக் கூறுதல். 1. கழைகொண்டு சேறல் (90. தேமென் கிளவி) இங்ங்னம் தலைமகள் தன் மனத்தொடு கூறி வாளா இருக்கச்,சேட்படை கூறத் துணிந்து நின்ற தோழியிடம் தஃலமகன் கையுறையுடன் சென்று பின்னும் தனது குறையைத் தெரிவிக்க வேண்டிப் பூவை உடைய மெல்லிய தழையையும், அழகிய பூக்களையும் கொள் கின்றிலீர்; தனித்து நான் வருந்தக் கொடுமைப் பாட்டினைச் செய்து உம் கண்மலராம் காம பாணத்தைக் கொண்டு என்னை அலைத்தலையோ நீங்கள் முழுதும் கற்று உள்ளது, நும்மால் அருளுமாறு கற்கப்பட்டது இல்லையோ' என வருந்திக் கூறினன். 2. சந்தனத்தழை தகாது என்று மறுத்தல் (91. ஆரத்தழை) சந்தனத் தழையுடன் வந்த தலைமகனை நோக்கிப் 'பொதிகை மலையில் உள்ள இச் சந்தனத் தழைகளை அண்ணலே நீ'தந்தால் அத் தழைகளைப் பிறர் அவள் அணியக் கண்டால் இங்கு இல்லாத இத் தழையைக் கொண்டு வந்தார் யார்? என ஐயமுண்டாகும்; ஆதலால் இவை கொள்ளேன்’ என்று தோழி கூறித் தலைமகனைச் சேட்படுத்தினள். 3. நிலத்தின்மைகூறி மறுத்தல் (92. முன்தகர்த்து) இங்ங்னம் சந்தனத் தழையைக் கொள்ள மறுத்த தோழி பின்னும் அவன் பிறிதொரு தழையைக் கொண்டு வந்ததைக் கண்டு, 'இம் மலையிடத்து (கயிலைமலை யிடத்து) இல்லாத இத்தழையை அண்ணலே ! நீ தந்தால் குறத்தியராகிய எங்களுக்கு இதுவரை எங்கள் குடியில் இல்லாத பழிவந்து சூழ்ந்து கொள்ளும் என்று.