பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. சேட்படை கடடு 19. அவயவம் கூறல் (108. குவவின) தோழி அங்ங்னம் கேட்க, அவளை (தலைவியை) இவள் (கோழி).அறிந்திலள்; அறிந்தாளாயின் தழையை வாங்கு வ கள் : என உட்கொண்ட தலைவன், தன்னல் கருதப் ளுக்கு அவயவம் இவை எனத் தோழிக்கு விளக்க வேண்டித் தலைவியின் குவிந்த கொங்கை குரும்பையை ஒக்கும் குழல் கொன்றைப் பழத்தை ஒக்கும்; செவ்வாய் கொவ்வைக் கனியை ஒக்கும்; அவளுடைய வாள் நகை (பற்கள்) வெண்முத்தை ஒக்கும்; கண்மலர் செங்கழு ைேர ஒக்கும்; ஒளி முகம் உவவின் மதிபோல்(பூரண நிலவு போல்) ஒளிரும்; என்னுல் காதலிக்கப்பட்டவளுக்கு அவய வங்கள் இவ்வாறு இருக்கும். இப்படிக்கு அவயவங்களை டையாளையும், அல்லா தாரையும் உன்னல் கண்டு கொள்ள முடியாதோ’’ எனத் தோழிக்குக் கூறினன். 20. கண்ணயந் துரைத்தல் (109. ஈசற்கு) அங்ங்னம் தலைவியின் அவயவ இலக்கணங்களைக் கூ மிய தலைவன், அத்துடன் அமையாது அன்று தனக்கு இத் தோழியைத் தனது கண்ணுல் காட்டின தலைவியின் கண்ணை நினைந்து, அக்கண்ணுல் தான் பெரிதும் இடர்ப் பட்டான் ஆதலின் கண் மலர் செங்கழுநீர் என்று தான் கூ மினது அமையாது ஆதலின், பின்னும் அக் கண்னை நினைந்து, - ஈசனிடம் யான் வைத்த அன்பு போல அகன்று, ஈசனுல் வாங்கப்பட்ட எனது பாசம் போலக் கறுத்து, அவனது தில்லையின் ஒளியை ஒத்து, அவன் (சிவந்த) தோள்களில் பூசியுள்ள அத் திருநீறு போல வெளுத்து, அவனுடைய பூப்போலும் திருவடிகளைப் புகழ்ந்து யாம் பேசும் அத்திரு வார்த்தை போல மிகவும் நீண்டு இருக்கும் ; என்னுல் காணப்பட்டவ எருடைய பெரிய கண்கள்' எனப் பின்னும் தலைவன் விளக்கமுறக் கூறினன். விளக்கம் :-இவை கண்ணின் இலக்கணம் காட்டிய வாகும். அவ்வில்க்கணம் பீன் வரும்ாறு :