பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ங்ட பிா திருக்கோவையார் உரைநடை கண்ணிற் கியல்பு கசடறக் கிளப்பின் வெண்மை, கருமை, செம்மை, அகலம் நீளம், ஒளியென நிகழ்த்துவர் புலவர்' இவ்விலக்கணப்படி செம்மை கண்டிலேம் என்பதற்குச் செம்மையும் கூறிற்ரும். எங்ங்ணம் எனில் அவன் தோளில் பூசத் திருநீறு என்ற தல்ை சிவப்பும் சொல்லிய தாயிற்று. (அவன் 'சிவனெனும் நாமந் தனக்கே யுடைய செம்மேனி எம்மான்' ஆதலின்.) ('யான் பேசத் திருவார்த்தை என்னுது ‘யாம்? என்றது என்னையோ எனில் திருவார்த்தை பேசும் அன்பர் பலர் ஆகலான் ‘யாம்' என்று பலராகக் கூறினர்.) 21. தழை யெதிர்தல். (110. தோலாக்கரி) தaலவன் இங்ங்னம் தலைவியின் கண்களை விளக்கிய தைக் கேட்ட தோழி, "எம்மை ஏதம் செய்ய வந்த யானையை நீ வென்றதை நினைத்தும், யான் பலமுறை மறுத்தும் போகாது, பேரன்பினை உடையவனுய் நீ விடாது துவண்ட துவட்சியை நினைத்தும் தழையை வாங் குவேம், அல்லது, எமது குடியின் பழமைக்கு இயலாத இயல்பை உடையது இத்தழையை ஏற்பது' என்று கூறி மறுப்பது நியாயம் அன்று அதனுல் நீ அவளுக்குத் தந்த கொய் தழையை ஏற்கிருேம். (நீ செய்த உதவியைப்பற்றி அல்லது ஏலேம் என்றவாறு.) 22. குறிப்பறிதல். (1.1.1. கழை காண்டலும்) தலைவன் மாட்டுத் தழையை ஏற்றுக்கொள்வேன் என்ற தோழி, தலைவிக்குத் தெற்றெனக் கூறுவேனுயின் அவள் மறுக்கவும் கூடும் என உட்கொண்டு “இதுவரை தழை ஏலாமைக்குத் தக்த பொய் சொல்லி மறுத்தேன்; இனித் தலைவனுக்கு வருத்தம் தரக்கூடிய நோக்கத்தைக் கண்டபின் என்ன செய்வது என்று தெரியவில்லை.