பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ திருக்கோவையார் உரைநடை பிறிதோரிடத்தில் இல்லை. ஆதலால் இத்தழையைக் கொள்வாயாக’’ என்று கூறித் தழையைத் தலைவியிடம் கொடுத்தாள். 26. தழ்ை விருப்புரைத்தல் (115. பாசத்தளை) o தழையைக் கொடுத்தபின் தோழி தலைவனிடம் சென்று நீ தந்த தழையை நான் தலைவியிடம் கொடுத் தேன். அங்ங்னம் கொடுப்ப அங்கு நிகழ்ந்ததைச் சொல்வேளுயின் பெருகும். சுருங்கச் சொல்லின் அத் தழையை அவள் அரைத்துப் பூசிக்கொள்ளவில்லையே ஒழிய வேறு செய்யாதனவில்லை' என்று தலைமகளுக்கு அத்தழைமீது இருந்த விருப்பத்தைத் தலைவனுக்கு எடுத்துக் கூறினள். குறிப்பு :- கஉ. சேட்படை' என்னும் இவ்வதிகாரம் 1. திழைகொண்டு சேறல் முதலான 36 துறைகளைக்கொண்டு. த ை! - † துறை முடிகின்றது. கக. பகற்குறி தலைமகளைத் தழை ஏற்பித்த தோழி தலைமகனுடன் அவளைப் பகற்குறிக்கண் சேர்ப்பித்தல். 1. குறியிட்ங் கூறல் (116. வான் உழை) தலைவி தழை விரும்பினதைத் தலைவனிடம் கூறிய தேர்ழி தலைவி விளையாடுமிடத்து ஒரு கரிய பொழில் கதிரவன் நுழையா இருளாய் உள்ளது. அப்பொழிலின் நடுவில் ஒரு பளிங்குப் பாறை இருக்கின்றது. அங்கு நட்சத்திரங்கள்போலச் சுரபுன்னை மலர்கள் விளங்கி நிற்கும். அப் பளிங்குப் பாறை சந்திரன் தன் வானி டத்து வாழ்வைவிட்டு அக்கானிடத்து வாழ்தலை விரும்பு தல் போலத் தனது எழிலைப் புலப்படுத்தும். அவ்