பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து 2- திருக்கோவையார் உரைநடை 11. ஆடிடம் புகுதல் (126. அறுகால்) அங்ங்னம் சேர்ந்த தோழி அழகான நல்ல மணம் பொருந்திய பூங்கொத்துக்களை ஐம்பால் வகுத்த உனது. கூந்தலிலே நிறைய அணிந்தேன். சிறிய தென்றல் வீசும் உன் இடை தளர்ந்து வருந்தாதபடி உன் பழைய ஆயக் கூட்டத்தாரிடத்தே நீ மெல்லச் சென்று சேர் வாயாக' எனக் கூறித் தலைவியுடன் ஆடிடம் புகுந்தனள். - 12. தனிகண்டுரைத்தல் (127. தழங்கும்) தலைவியை ஆயத்துய்த்த தோழி தலைவனைத தனி யாகக் கண்டு, ' அருவியை உடைய இதே எம்முடைய சீறுTர். இதன்கண் யாம் அருந்தும் தேனையும் கிழங்கையும் நி அருந்தி இன்று எம்மூர் தங்கி, குன்றத்தினர் விளையாடும் குர வைக் கூத்தை இன்று இரவு கண்டு நாளை உன் நகர்க்கு ஏகுவாயாக,” என்று உலகியல் கூறுவாள் போன்று வரைவு (திருமணம்) பயப்பக் கூறினள். 13. பருவங் கூறி வரவு விலக்கல். (128. தள்ளி) இங்ங்னம் உலகியல் கூறுவாள் போன்று குறிப்பால் திருமணத்தைத் தலைமகனுக்கு உணர்த்திய தோழி, தலைவியுடைய இடையை அவளுடைய غهbuغ تو ؟، அழகிய முலைகள் வளர்கின்றபடியால் வருத்துவன போன்றன. ஆகையால் கடுக அவளைத் திருமணம் செய்து கொள்வாயாக, எனத் தலைவியின் பருவங் கூறித் தலைவன் வரவைத் தோழி விலக்கினள். 14. வரைவுடப்படாது மிகுத்துக்கூறல். (129, மாடம்செய்) இங்ங்ணம் தன் வரவைத்தோழி விலக்கக் கேட்ட தலை வன் தெய்வலோகத்திலுள்ள பெண்களும் இத்தலைவிக்கு ஒப்பு அல்லர் என்னும்படி தாமரைப் பூவைத்தனது நிலை பெற்ற பீடமாகக் கொண்டிருக்கின்ற பிரமனலே பெறப்