பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க உ. பகற்குறி ரி , கென் றன எனக் கூறித் தலைவியைக் கோலஞ் செய்து 'இவை நின் தோழி செய்த கோலமே, நான் பிறிதோர் கோலம் செய்தே னென்று நீ கலங்க வேண்டாம்.’’ எனச் சொல்லித் தான் தல்ைவியுடன் கூ டி ன தைத் தோழி அறிந்தமையைத் தலைவிக்கு ப யை த்தனன். 8. உண்மகிழ்ந் துரைத்தல். (123. செழுநீர்) அங்ங்னம் தலைவன் தங்கள் கூட்டத்தைத் தோழிக்கு அறிவித்தனன் என அறிந்த தலைவி இனி நமக்கொரு குறை இல்லை என உண்மகிழ்ந்து முகம் ԼD6Ն Մ Ir நிற்ப, அம்முகமலர்ச்சியைக் கண்ட கஃலவன் தலைவியைக் கழுநீர் மலராகவும், தான் அம் மலரில் உள்ள தேனைப் பருகும் வண்டாகவும் புனைந்து தன்னுள் மகிழ்ந்து கூறினன். 9. ஆயத்துய்த்தல் (124. கொழுந்தாாகை) அங்ங்னம் மகிழ்ந்து கூறின தலைவன் நட்சத்திரங் களாகிய முகைகளையும் மேகமாகிய பச்சை இலையையும் உடைய விண்ணுகிய மடுவின் கண் எழுந்து நிறைந்த மதியாகிய வெண்டாமரைப்பூ தனது எழிலைப் புலப்படுத் தினமை போல நீ சென்று பொழிலில் விளையாடுகின்ற உன் ஆயத்துடன் உன் பொலிவு விளங்க இனிச் சேர்ந்து விளையாடுவாயாக என்று கூறித் தலைவியை ஆயத்துக்குச் செல்லச் செலுத்தினன். 10. தோழிவந்து கூடல் (125. பொன்னையான்) இங்ங்னம் தலைமகனைப் பிரிந்த தலைவி பூக்கொய்யா நின்ருளாகப் பிரிவாற்ருமையானும் பெருநாணினனுந் தடுமாறி மொட்டுக்களைப் பறியா நிற்ப, 'யானின்குழற் காம் பூக்கொண்டு வந்தேன், நீ விரல் வருந்த மொட்டுக்களைப் பறிக்க வேண்டா' எனக் கூறித் தோழி வந்து அவளிடம் சேர்ந்தாள்.