பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ. ப திருக்கோவையார் உரைநடை அவ்விடம் வேய் முத்துதிர்தலான் நினது மெல்லடிக்குத் தகாதாதலான் நீ என்ைேடு வாராது இங்கே நின்று. பூக்கொய்வாயாக' வெனத் தலைமகளைக் குறியிடத்து நிறுத்தித் தான் நீங்கினள். 5. உவந்துரைத்தல் (120. படமா) இங்ங்னம் தோழி, தலைவியைக் குறியிடத்து நிறுத்தி நீங்கினவுடன் தலைவன் வந்து தலைவியை எதிர்ப்பட்டு ‘'இப்பளிங்குப் பாறையைப் படத்தை உடைய பாம்பாகிய பள்ளியாக்கி என்னை அப் பாம்புப் பள்ளியில் தங்கும் திருமால் என்று நீ நினைத்தோ அல்லது திருமாலின் மார்பிலன்றித் தாமரையிலும் இருத்தலால் நான் உன்னை விட்டு நீங்கினும் என் இதய தாமரைப் பூவையே உனக்கு இடமாக இருக்க நினைத்தோ நீ இந்தப் பொழிலிடத்து வந்து நிற்கின்ருய்' எனத் தலைவியை உவந்து உரைத்தான். 6. மருங்கணதல். (121. தோத்தீன்மலர்) அங்ங்னம் தலைவன் உவந்துரைப்பக் கேட்ட தலைவி பெருநாணினள் ஆதலின் தன் கண் புதைத்து ஒரு கொடியின் கண் நாணத்துடன் மறைந்து நிற்க அவளது இடை அடர்ப்புண்ணக் கண்ட தலைவன் பித்தை உடையீர் ஏ 'பனை முலைகாள்! நீர் இன்னும் பெருக் கின்றது என்னுக்கு ? இது நன்றன்று, என்று கூறி. தான் ஆதரவு உரைத்து அம்முலைகளை முனிந்து அவளது இடையைத் தாங்குவாய்ை அவள் மருங்கு சென்று அவளை அனைத்து நின்ருன். 7. பாங்கி யறிவுரைத்தல் (122. அளிகீடு) அங்ங்னம் தலைவியின் மருங்கு அணைந்த தலைவன் தலைவியை நோக்கி 'உன் கூந்தலில் இட்ட பூவும் நீ அணிந்துள்ள அணிகளும், கூந்தலில் நீ சுற்றி வைத்துள்ள மாலையும் எல்லாம் முன்போல் இருக்