பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, ! திருக்கோவையார் உரைநடை இளமைப் பருவம் புகுந்தமையால் மகட் கூறு வார்க்கு அன்னை மாருது கொடுக்கும்; நீ அதற்கு முற்பட வரைந்து கொள்ள வேண்டும் என்றது 18. இற்செறிவு அறிவித்து வரைவு கட்ாதல் (133. ஈ விளையாட) இங்ங்னம் கூறிய தோழி எம் அன்னை தலைவியை உற்று நோக்கி, நீ திருமலைக்கப்புறம் போய் விளையாட வேண்டாம் என்று கூறினுள். இனி இற்செறிப்பாள் போலும் என்று தலைவனிடம் உரைத்து வரைவு கடாவினள். 19. தமர் நினைவுரைத்து வரைவு கட்ாதல். (134. சுற்றஞ்சடை) தலைவியை இற்செறிப்பாள் எனக் கூறிய தோழி * முலை தாங்க கில்லாது தலைவியின் இடை வருந்துதலைக் கண்டு தலைவியைத் தமர் இற்செறிப்பார் மற்றும் இந்தச் சிறுாரில் பேசப்படும் பெரிய வார்த்தைகள் பழிச் சொற்கள் சில பலவுளவாகும். அயலவரும் மகட்பேச நினையா நின் ரு' ரெனத் தமர் நினைவுரைத்து வரைவு கடாவா நிற்பர் எனத் தலைவனிடம் கூறி வரைவு கடாவினள். 20. எதிர் கோள்கூறி வரைவு கட்ாதல். (135. வழியும்.அது) அங்ங்னம் தமர் நினைவுரைத்து வரைவுகடாய தோழி, 'தலைவியை அடைவதற்கு வழி அவளை மணந்து கொள்வதே, அன்னையும் என்னைப் போல மகிழ்வாள். எந்தையும் உன் தகுதி நோக்கி உன் மொழியைக் கடவாது அதன் வழியே நிற்கும். சுற்றத்தாரும் நின் வசப்படுவார். அயலவரும் நின் வரவை எதிர்கொள்வர். .பல சொல்லுவானேன் திருக்குற்ருலத்துள்ளார் அறிய