பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவையார் உரைநடை 3. தின்று நெஞ்சு உடைதல் (150. மாற்றேன்) இவ்வாறு தோழி வழியருமையைக் கூறக் கேட்ட தலைமகன் கொடுங்குன்ற மலையின் உச்சியிலுள்ள தேனைப் பெற விரும்பிய முடவனைப் போல அடைதற்கு அரிய்ாளை விரும்பு 'நெஞ்சமே நீ மெலிகின்ருய்; நான் இதற்கு ஆற்றேன்' எனக் கூறி நெஞ்சுடைந்து 4. இரவுக்குறி நேர்தல் (151. கூளிநிறைக்க) இங்ங்னம் தலைவன் நெஞ்சு உடைந்து வருந்தி இருப்பதைக் கண்டு (இவன் இறத்து படவுங் கூடும் எனக் கருதித்) தோழி, தலைவனிடம் 'நீ ஆளிகள் நிறைந்து யானைகளைத் தேடும் இரவில் வந்து மீளுதலைச் சொல்லா நின்ருய்; இனி தலைவிக்குத் தீவினையேன் சொல்லுவது என் ? உடன்படுவாயென்பேனு ? மறுப்பா யென்பேனு ?' என்று இரவுக் குறிக்கு நேரா நின்ருள் (உடம்பட்டாள்) 5. உட்கோள் வினுதல் (152. வரையன்று) இரவுக் குறிக்கு உடம்பட்ட தோழி (தங்கள் நிலத்து மக்கள் கோலத்தளுய் வருதற்கு அவன் உட்கொள்ள வேண்டி) நின்னூரிடத்தார் பூசும் விரை (வாசனைப் பொருள்) யாது ? அவர் விளையாடும் நிழல் எத்தன்மை யது? அவர் சூடும் வாசனையுள்ள மலர் எத்தன்மையது? நன்மை பரந்து விளங்குவன எத்தன்மையன ? சொல்லு வாயாக’’ என்று தலைவனைக் கேட்டாள். 5. உட்கொண்டு வினுதல் (153. செம்மலர்) அங்ங்னம் தோழி கேட்ட விைைவ உட்கொண்டு அந்நிலத்து மக்கள் கோலத்தனய் தான் வருதற்கு வேண்டி இராப்பொழுதின்கண் துமர் விளையாடுவது எம்மலரைச் சூடி நின்று ? எச்சாந்தை அணிந்து