பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. இரவுக் குறி ஆP ஆ. நல்ல நெஞ்சமே ! நீயும் தளர்ந்தனை, நானும் தளர்ந் தனன்’ என்று தன் நெஞ்சோடு உசாவித் தோழி கேட்பத் தலைவியின் பதி நோக்கி வருந்தினன். குறிப்பு : பகற்குறி என்னும் இவ்வதிகாரம் 1. குறியிடங் கூறல் முதலான 83 துறைகளைக் கொண்டு முடிகின்றது. கச. இரவுக்குறி பகற்குறி புணர்ந்து விலக்கப்பட்ட தலைமகன் பின்னையும் தோழியைத் தலைப்பட்டு இரவுக்குறி வேண்டிச் சென்று எய்து தன் முறைமை. 1. இரவுக்குறி வேண்டல் (148. மருந்து) பதிநோக்கி வருகின்ற தலைவன் மேகத்திளுல் புதைந்து இருள் நிறைந்த உங்கள் சீறுாருக்கு நான் விருந்தினன். என்னை ஏற்றுக் கொள்வாயாக’ என்று தோழியிடம் கூறிஞன். 2. வழியருமை கூறி மறுத்தல் (149. விசும்பினுக்கு) இவ்வாறு தலைமகன் இரவுக்குறி வேண்டி நிற்ப, 'ஐயனே ஆகாயத்திற்கு இட்டதோர் ஏணி நெறி போலும் எம் வாழ்பதி உளது. அதுவேயும் அன்றி, மழை இடையருது பெய்வதால் இடையிடை உண்டாகிய, திவலைகளால் முழையிலே (குகையிலே) துழைவது ($ 1 ltr லும் அவ்வழி; அதுவன்றியும், வழுக்குதலாலே, மனத்தாலும் ஏறி வருவதற்கும் வழி அரிதாகும். இளம் பிறை சூடிய பெருமானுடைய பொதியின் மலையில், நாங்கள் வாழுமிடம் உள்ளது” என்று வழியருமை கூறித் தோழி. தலைவன் வரவை மறுத்துக் கூறினள். ჯn) (it,. - 4