பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு- அ திருக்கோவையார் உரைநடை என்று மறைப்புறமாக சிறைப்புறத்தேக் கூறித் தோழி வரைவு கடாவா நின்ருள். 30. மயிலொடு கூறி வரைவு கட்ாதல் (145. கணியார்) பிரிவு அருமை கூறி வரைவு கடாய தோழி, கணியார் கருத்து இன்று முடிந்தது. நாங்கள் போகின்ருேம். புனமே பொழில்களே ! வேங்கையொடு சேர்ந்திராயின் நீர் எம்மை மறப்பீர். கயிலையினின்று வந்த மயில்காள் வேலேந்தித் தனியாக வரும் அவர் (தலைவர்) வந்தால் அன்புடைய நாங்கள் துணியாதன துணிந்தோம். (பிரிந்திருக்கத் துணிந்தோம்) என்று அவருக்குச் சொல்லுங்கள்' என மயிலொடு கூறி வரைவு கடாவா நின்ருள். 31. வறும்புனங் கண்டு வருந்தல் (146. பொதுவினில்) f அங்ங்ணம் கூறித் தோழி புனங்காவலை விட்டுப் போன பின்பு தலைவியை நாடி வந்த தலைவன் புனத்திடை வந்து, 'யான் முன்பு பயின்ற இடமேயாயின் இந்த இடம் ஏன் இவ்வாறு இருக்கின்றது ! பெரிய பொழிலே! நுமக்குத் தான் இன்று வந்தது யாது ? இப்பெரிய புனம் அருவியாய் விழும் மதுவின்கண் (தேனில்) அதன் சுவையை மாற்றும். கைப்பாகிய (கசப்பாகிய) சுவையை வைத்ததுபோல் இருக்கின்றது' என்று கூறி வறும்புனத்தைக் கண்டு மெய்யுற்று வருந்: தினன். 32. பதி நோக்கி வருந்தல் (147. ஆனந்தமாக் கடல்) இவ்வாறு வறும் புனத்திலே வருந்தி நின்ற தலைவன் பொன்னினுடைய (தலைவியினுடைய) மலைக்கண் உள்ள சிறுரர் இது; இவ்வாறு ஊர் அணித்தாயினும் எம்மால் செய்யலாவ தொன்றில்லை ; வானின்கண் செல்லும் பெரிய சந்திரனைப் பெறவேண்டி அழுகின்ற குழந்தை யைப் போல எய்துவதற்கு அரிய தலைவியை விரும்பி