பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. பகற்குறி து விT அரும்பறக் கொய்தோமாயின், இன்று நம்மைக் கெடுப்பான் வேண்டி இந்தக் கணி (வேங்கை) இத்தினை (oli, i முயலுமாறு முண்டோ ? யா மது செய்யப் பெற்றிலேம் என்று வேங்கையொடு வெறுத்து'அவ்வேங் கையை இழித்துக்கூறித் தோழி வரைவு கடாவா நின்ருள். 27. இரக்கம் உற்று வரைவு கடாதல் (142. வழுவாஇயல்) வேங்கையொடு வெறுத்து வரைவுகடாய தோழி, விதைக்கும் பருவத்தும் கொய்யும் பருவத்தும் வழுவாது செய்யும் இயல்பையுடைய எம் தமராகிய மலேயர் விதைப்ப யாம் வளர்த்த தினைக் கதிர்கள் எல்லாம், (திருச்சிற்றம் பலவரைச் சென்று நின்று தொழுவார் வினை அவர் மாட்டு நின்ருல்) இப்புனத்தில் நிற்கும், எவ்வாறு அவ்வினை நில்லாதோ அவ்வாறு அக்கதிர்களும் நில்லா ஆயின என்று சிறைப்புறமாகத் தலைவன் மாட்டு இரக்க முற்றுத் தோழி வரைவு கடாவா நின்ருள். 28. கொய்தமை கூறி வரைவு கடாதல் (148. பொருப்பர்க்கு) அங்ங்னம் தலைவன் மாட்டு இரக்கமுற்று உரைத்த தோழி, 'அம்பலவரின் அன்பர்களுடைய கரு (பிறவி) பற்று விட்டது போலக் காவலில் இருந்த இப்புனம் இப்பொழுது கொய்யப்பட்டுத்தொடர்பற்று நிற்கின்றது. அதனுல் எமக்கு இப்புனங் காவல் இனி இல்லை. உமக்கு பாம் அறிவு சொல்கின்றேம் அல்லேம். நீரே அறிவிர்’’ னத் தலைவனிடம் தினை கொய்தமை கூறி வரைவு கடாவா நின் ருள். 29. பிரிவு அருமை கூறி வரைவு கடாதல் (144. பரிவுசெய்து) தினை கொய்தமை கூறி வரைவுகடாய தோழி, இப் புனத்தில் உண்டாய தினையைக் கொய்த பின்பும் கொய்யப்பட்ட தினையின் தாளில் இளங்கிளிகள் வந்து நிற்கின்றன. இச்செய்கை பேயோடாயினும் பிரிவு அரிது என்னும் உண்மையைக் காட்டுகின்றது.'