பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுஉ திருக்கோவையார் உரைநடை படி சிங்கமானது யானை வேட்டை செய்யும் வல் இருளில் யாவரும் வழங்காத வழி இடத்து எம்முடைய வள்ளலை வா' என்று சொல்லத் தகுமோ என்று தோழியிடம் கூறினள். 11. குறை நேர்தல் (158. ஒங்கும் ஒரு) இங்ங்னம் ஏதம் கூறி மறுத்த தலைவி தலைவ. னுடைய ஆற்ருமை ஆகிய நிலையைக் கேட்டு, மலையி லுள்ள சுனைப் புனலில் நான் விழுந்து அழுங்க என்னைப் பிடித்து எடுத்துக் கரையிற் சேர்த்த பெரி யோருக்குச் சிறியேனுகிய நான் (அவர் செய்த உதவிக்குக் கைம்மா ருக) இன்ன வார்த்தை சொல்வதென அறி யேன்” என்று தோழியிடம் கூறி இரவுக் குறிக்கு உடம் பட்டாள். f 12. குறை நேர்ந்தமை கூறல் (159. ஏனற் பசுங்கதிர்) இவ்வாறு தலைவி உடம்பட்டவுடன் தோழி தலைவ னிடம் சென்று, நின் ஏவலை இன்று இரவின்கண் செய்ய வேண்டி யான் (தில்லையைச் சேராதார் படு: கின்ற) துன்பம் எல்லாம் பட்டேன். இப்படிப் பாடு பட்டு நீ கருதிய காரியத்தை முடித்தேன், (தலைவியை இரவுக் குறிக்கு உடம்படும்படி செய்தேன்) என்று தலைவனிடம் தலைவியின் உடம்பாட்டைத் தெரிவித் தாள். 13. வரவுணர்ந்துரைத்தல் (160. ഴഞ്ചധ ു--പ இங்ங்னம் தலைவியின் உடம்பாட்டைத் தலைவனுக்கு :உரைத்த தோழி “சிற்றம்பலத்தாருடைய திருவருள் போல ஒர் இன்பம் வந்து பொருந்து மென்று தம் முடைய தோகைகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியைச் சொல்லுவது போல மயில் கூட்டங்கள் ஆரவாரத்தை உடையனவாய் உறக்கம்" ஒழிய நின்றன. என்று தலை வனது வரவைத் தலைவிக்குத் தெரிவித்தாள்.