பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. இரவுக் குறி டுடு வேண் டாம். உன் அருமையான தோழியுடன் ஆயத் தி ைப் போய்த் துயில்க' என்று கூறிப் பிரியலுற்ருன். 21. வரவு. விலக்கல் (168. நற்பகல்) ■+ தலைவியைப் பள்ளியிற் சேர்த்த பின் தோழி தலைவ. னி ம் சென்று, தலைவியின் பொருட்டு இந்த மலைச் சிறுவழி உனக்கு மெய்யாகவே எளிதாக இருக்கின்றது. ஆயினும் நீ வரற்பாலையல்லை' என்று கூறித் தலைவ ஒனுடைய வரவை விலக்கினள். (இக்களவொழுக்கம் இவள் பிறந்த குடியும் அழிந்து உன் பெருமைக்கும் அழிவாகப் புகும் என்ற காரணத்தால்) 22. ஆற்ருது உரைத்தல் (169. பைவாய் அாவு') தலைவியை மணத்தல் வேண்டும், களவொழுக்கம் வேண்டாம் என்று கூறித் தலைவன் வரவை விலக்கின வரைவு (திருமணத்துக்கு) உடம்படாது பின்னும் கள வொழுக்கமே வேண்டி, 'யான் முன் செய்த தவப்பயனுக எனக்கு எய்தலாம் வண்ணம் திருமகளே இவ்வாறு கொடிச்சியாய் (குறமகளாய்) இருக்கின் ருள் என்று கருதியே எனது இன்னுயிர் என்றும் நிற்கின்றது. ஆத லால் நான் இத்தன்மையளை மணந்து கொள்வது எளி தாக நீ கூறுவது ஏன்?' என்று தலைவன் தனது ஆற்ருமை தோன்றக் கூறினன். 23. இரக்கம் கூறி வரைவு கட்ாதல் (170. பைவாய் அரவும்') இவ்வாறு களவு விரும்பி வரைவுக்கு உடம்படாத தலைவனுக்கு, “நீ செல்லும் வழியில் உனக்கு இடையூறு ஏதேனும் வருமோ என்று அஞ்சித் தலைவி கண்ணிர் விடுகின் ருள், ஆதலால் நீ தில்லையை நல்லபடி சேர்ந்த தைத் தெரிவிக்கக் கரிய கொம்பைச் சிவந்த வாயிலே வைத்து ஊத வேண்டும்' என்று தலைவனிடம் தோழி கேட்டுக் கொண்டாள்.