பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுச திருக்கோவையார் உரைநடை 17. தளர்வு அகன்று உரைத்தல் (164. காமரை) இங்ங்னம் தலைவியைக் குறி இடத்தில் நிறுத்தித் தோழி நீங்கத், தலைவன் எதிர்ப்பட்டு, (இலக்குமி போன் றவளே!) சூரியன் அடைத்த தாமரையாகிய உனது வீட்டின் இதழ் ஆகிய கதவைத் திறந்தோ போந்தது. இது கிடக்க, மேகலை ஒலிக்காமல் பிடித்துச் சிலம்பு ஒலிக் காமல் மேலே தள்ளித் தனியே பைய அரையாமத்தில் நாம் இருவரும் வந்து தங்க நீ விரும்பியது என்னே? எனக் கூறுவாயாக’ என்று தலைவியைக் கேட்டான். 18. மருங்கு அணைதல் (165. அகிலின் புகை) அங்ங்னம் கேட்ட தலைவன் 'கூந்தலில் அகிலின் புகை ஊட்டி மலர் சூட்டி, உன் கண்ணுக்கு அஞ்சனம் எழுதத் தகும். ஆல்ை, ஒரு தனிவடத்தைப் பூட்டவும் தக்கவள் அல்லள் நீ; ஏனெனில் உன் இடை அதைத் தாங்காது; அங்ங்னம் மெலிந்துள்ள உன் இடை ஒடியும் போல் இருந்தாலும், அந்நிலையை உணராமல் உன் கொங்கைகள் மிகவும் விம்முகின்றன; இது எப்படி முடியுமோ?' என்று தலைவியின் இயலைப் புகழ்ந் துரைத்துத் தலைவியின் இடையைத் தாங்குவானைப் போல் அவள் மருங்கு அணைந்தான். 19. முகங்கண்டு மகிழ்தல் (166. அழுந்தேன் நரகத்து) அங்ங்னம் தலைவியின் மருங்கு அணைந்த தலைவன், 'யான் நரகத்தில் அழுந்தாவண்ணம் என்னை ஆண்டு கொண்ட பெருமானுடைய தில்லைப் பொழிலிடத்து உள்ள வயலில் மலர்ந்த குமுத மலர் இவள், நான் அம்மலரை மலர்த்தும் வானத்து இளமதி' என்று கூறி. மகிழ்ந்தான். 20. பள்ளி இடத்து உய்த்தல் (167. சுரும்புறு நீலம்) அவ்வாறு மகிழ்ந்ந தலைவன், நீ இப் பொழி லிடத்துத், தனியாக நின்று. நீல மலர்களைக் கொய்ய