பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. ஒரு வழித்தணத்தல் டு கூ 32. இரவுறு துயரங் கடிலொடு சேர்த்தல் (179. பூங்கனை) இங்ங்னம் தோழி தலைவனிடம் கூறினதால்: தலைவனை எதிர்ப்பட மாட்டாமல் வருந்திய தலைவி கடலை நோக்கி, 'ரே கடலே ! நீ ஓங்கி அணைந்த கரையைப் பொருந்தி புரண்டு விழுந்து எழுந்து கூச்சலிட்டு துன்ப முற்று ஓர் இரவு முழுதும் கலங்கித் தெளிகின்றிலை; அதனுல் உன்னை அணைந்த பின் உன்னை அகன்று சென்றவர் உளரோ' என்று தலைவி தான் பட்ட துயரத்தைக் கடலுடன் கூறினள். 33. அலர் அறிவுறுத்தல் (180. அலர் ஆயிரம்) இங்ங்னம் தலைவி தான் இரவில் பெற்ற துயரத்தைக் கடலொடு கூறினதைச் சிறைப்புறமாகக் கேட்ட தலைவன் குறியிடைச் சென்று நிற்பத் தோழி எதிர்ப்பட்டு, *சக்கரப் படையைத் திருமாலுக்குக் கொடுத்த தில்லைச் சிவனுடைய அருள் போல, ஐயனே ! உன்னுடைய மெய்யாகிய அருள் எங்களுக்கு (அம்பல் கைம்மிக்கு) அலராய் விளையா நின்றது. இனித் தக்கது செய்வாயாக' என்று தலைவனிடம் கூறினள். குறிப்பு : கச. இரவுக்குறி' என்னும் இவ்வதிகாரம் 1. இரவுக்குறி வேண்டல் முதலான 33 துறைகளே க் கொண்டு முடிகின்றது. கடு. ஒரு வழித்தனத்தல் அலர் எழுந்ததென்று விலக்கப்பட்ட பின்னர் தெருண்டு வரைதல் தலை; தெருளாயிைன் அவ்வலர் அடங்கச் சிலநாள் ஒருவழித் தணந்து உறைதல், உடன் கொண்டு போதல், தோழியால் வரைவு (திருமணம்) முடுக்கப்பட்டு அருங்கலம் விடுத்து வரைந்து கோடல் இம்மூன்றினுள் ஒன்று முறைமை என்ப. அவற்றுள் ஒரு வழித்தனத்தல் வருமாறு.