பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு அ திருக்கோவையார் உரைநடை எதிர்ப்பட்டு நீ கான்யாறு அளவில்லாதனவற்றை நீந்தி வந்தால் அங்குள்ள இடியேறு உன்னுடைய போர் வேலுக்கு அஞ்சி நின்பால் வாராதொழிக, ஆல்ை தெய்வங்கள் பொருந்தும் சோலையில் செறிந்த இருளில் வருதல் முறையன்று; அத் தெய்வங்களுக்கு நாங்கள் அஞ்சுகின்ருேம்; அதல்ை, அந்த இருளில் நீ வரற் பாலையல்லை' என்று தங்கள் அச்சத்தைக் கூறித் தலைவனுடைய வரவை விலக்குகின்ருள். (களவொழுக்கம் வேண்டாம் திருமணம் செய்து கொள் என்பது கருத்து.) 30. தன்னுள் கையாறு எய்திடுகிளவி (177. விண்தலை) இங்ங்னம் தலைவனுடைய வரவு விலக்கப்பட்டதல்ை வருந்திய தலைவி சந்திரனை நோக்கி, இரவு முழுதும் விண்ணிடத்து விளங்கும் சந்திர மண்டலமே! தில்லையில் கழி சூழ்ந்த கண்டலே (தாழையே) சான் ருகக் கன்னிப் புன்னைக் கண் என்னைக் கலந்த கள்வர் ஒருகால் வரக் கண்டிலையோ? துணையில்லாத எனக்கு ஒரு சொல் அருள்வாயாக’ என்று தன்னுள் வருத்தத்துடன் வினவினள். 31. நிஜலகண்டு உரைத்தல் (178. பற்ருேன்றிலார்) இவ்வாறு தலைவி தனது வருத்தத்தை மதியொடு கூறி வருந்துவதைச் சிறைப்புறமாகக் கேட்ட தலைவன் ஆற்ருமையால் குறி இடத்தில் வந்து நிற்கத் தோழி அவனை எதிர்ப்பட்டு நீ முருகவேளைப் போல இம்மலை யிடத்து வந்து நின்ருல் உன்னைக் கண்டவர்கள் இம் மலைக்கு உரியயை முருகன் என்று கருதி உன்னை மலரிட்டு வாழ்த்தி வணங்காமல், வேறு வகையாக நினைவாராயின் (அதாவது இவள் (தலைவி) காரணமாக வந்தாய் என்று கருதி உனக்கு ஏதம் (கெடுதி) செய்வார் களாயின்) தலைவி உயிர் வாழும் வகை வல்லளோ ? (உயிரை விடுவாள் என்றபடி) அதல்ை இவ்வாறு ஒழுகற்பாலையல்லை (மணம் செய்துகொள்) என்று கூறினள்.