பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அா உ திருக்கோவையார் உரைநடை 8. பொழுது கண்டு மயங்கல் (188. பகலோன்) அங்ங்னம் சுடரொடு புலம்பி நின்ற தலைவி. கதிரவன் மறைந்தான் இம்மாலைக் காலத்து உண்டாகும் துன்பத்தினின்றும் என்னைக் காக்கும் அவர் சேயரா யிருந்தார் (துாரத்தில் உள்ளார்) : அன்னங்கள் இவ்விடத்தை விட்டு தம் சேக்கைகளை (உறங்குமிடத்தை) அடைந்தன. இனி யான் என் செய்வேன் ? ஆற்றுதல் அரிதுபோலும் என்று மாலைப் பொழுது கண்டு தலைவி மயங்கினஸ் (கவலை யுற்றனள்.) 9. பறவையொடு வருந்தல் (189. பொன்னும்) பொழுது போனது கண்டு மயங்கின தலைவி “என்னுடைய ஆற்ருமைக்குப்பரிகாரம் யாதும் சிந்தியாது, கழியிடத்து உணவு தேடும் வண்டானங்களாகிய (குருகுகள்) என் உள் ளத்து நோயை இன் னும் அறிகின்றனவல்ல. இஃது என்ன பாவம்' என்று அப் பறவைகளுடன் கூறி வருந்தினள். 10. பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல் (190. கருங்கழி) அங்ங்னம் பறவைகளுடன் வருந்தின தலைவி 'சூரியன் மேருவைச் சூழ்ந்து மிக்க காததுரம் போய் விட்டான். இனி இவள் எங்ங்னம் ஆற்றுவாள் என்று வருந்தித் தாமரைகள் கண்ணிர் விட்டு (தலைவர்) விரைந்து வரவேண்டுமென்று அந்தச் சூரியனை நோக்கித் தம் மலராகிய கைகளைக் கூப்பி இரந்து நிற்கின்றன. இவை என்மாட்டு அன்புடையன போலும்' என்று தலைவி பங்கயத்தொடு (தாமரையொடு) அன்புற்று உரைத்தனள். ப 11. அன்னமோடு அழிதல் (191. மூவல்) பங்கயத்தை நோக்கி அவ்வாறு அன்புற்ற தலைவி 'இவ்வுலகம் முழுதும் துயில்கின்றது, நான் துயிலாமல் வருந்துகின்றேன்; யான் துயிலாமைக்குக் காரணமாகிய