பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 37. போற்றத்தக்கவர் யாவராலும் புகழ்ந்து போற்றத் தக்கவர் பெருமா . 38. மருந்து சதவர்களுக் கெல்லாம் உறுதி பயக்கும் மருந்தும், அமிர்தமும் ஆவர் பெருமான். ' எங்கள் அழகு அழிந்தோம்; இக் கஞ்சை உண்பாயாக வேண்டும்” என்று முறையிடுகிற தேவர்களுக்கு மருந்தானவர் பெருமான். கம்முடைய துன்பம் கிறைந்த பிறவிப் பிணிக்கு மருந்தாய், அம்பலத்து அமிர்தாய் இருக்கின் ருர் பெருமான். தான் எப்பொழுதும் கி%னக்கின்ற மருந்து பெருமான். 39. முத்தி தருதல் தமது திருவடிக்கண் உண்டாகிய பற்.அதரும் முத்தியை அடியார் பெறும் வண்ணம் (எல்லாப் பொருளே யும் அகப்படுத்தி கிற்கும்) ஆகாயத்தையும் கடந்து கின்ற தான் ஒரு வடிவு கொண்டுள்ளவர் பெருமான். அடியார்க்கு முத்தியை வழங்குபவ ர் பெருமான். 40. முன்பு ஆவார் எவர்க்கும் தேவர்க்கும், எவர்க்கும் முன்னவர் பெருமான, எல்லார் யாக்கைக்கும் முன்னே தன் இச்சையாற் கொள்ளப் பட்ட திருமேனியை உடையவனதலின் எல்லார்க்கும் தான் ஆமப்பான் ; உலகத்திற்கு முன் உள்ளோன். 41. மேலானவர் எல்லார்க்கும் மேலானவர். 42. யார்க்கு அருளார் நெஞ்சில் கள்ளத்தை உடைய வஞ்சகர்க்கு அருள் செய்ய மாட்டார் இறைவர். பொய்யை \உடையவர்க்குத் துன்பத்தைச் செய்து (சேயன் ஆவார் 'பெருமான்.) அவரை விட்டு அகல்வார்." r.