பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. உடன்போக்கு r டு மு?லப்பரிசம் கூறுவாயாக’’ என்று கேட்க 'வடுவ கிர் போலும் கண்ணை உடைய தலைவியின் சிறிய இடைக்கே எல்லா உலகமும் நல்கினலும் விலை போதாது. அப்படி இருக்கப் .பெரிய முலைக்கு விலை கூறுவது எப்படி ?' என்று தோழி விலை அருமை கூறினள். T 5. அருமை கேட்டு அழிதல் (198. விசும்புற்ற) தோழி சொன்ன அருவிலை கேட்ட தலைவன், :: த லவியின் கொங்கை, பாம்புபோலும் இடை, எயிற்றின் கண் ஊறிய நீர், குழலோசை போலும் மொழி ஆகிய இவற்றின் கண் கிடந்த இன்பத்தையே கருதி நடுங்கித் தளர் கின்ற நெஞ்சமே! ஆகாயத்தில் உள்ள சந்திரனைத் தரும்படி அழுகின்ற குழந்தை போலக் கண்ணிருடன் பொருமிப் பொருமி இனிக் கிடந்து அலறுவாயாக' எனத் தன் நெஞ்சொடு அழுந்திக் கூறி நின்ருன். 6. தளர்வு அறிந்து உரைத்தல் (199. மை தயங்கும்) இங்ங்னம் தலைவன் வருந்தியதைக் கண்ட தோழி அவளைத் திருமணம் செய்ய இசைவு இலாதாயின் அவளை உடன் கொண்டுபோ' என்ற கருத்துத் தலைவனுக்குப் படும்படி * தலைவி கடலை நோக்கியும், கான8ல நோக்கியும், கண்ணிருடன் தன் ஆயத் தாராகிய நல்லாரை எல்லாம் புல்லிக் கொண்டாள்; அவள் கருதியது ஒன்று உண்டு போலும்; அஃது இன்னது என்று தெரியவில்லை' என்று தலைவியின் தளர் வைத் தலைவனுக்கு உரைத்தாள். 7. குறிப்பு உரைத்தல் (200. மாவை) இங்ங்னம் தலைவியின் தளர்வைத் தலைவனுக்கு எடுத்துக் கூறிய தோழி தலைவி இன்று என்னைப் புல்லிக் கொண்டு தன் பூவையை என் கையில் தந்தாள். பின்பு பொன் தகட்டால் செய்யப்பட்டி பந்தையும் தந்தாள்; பைங்கிளியையும் தந்தாள். அவள் நினைத்த கருத்து திரு. - 5