பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்ா கா திருக்கோவையார் உரைநடை இன்னதென்று அறிகிலேன். நின்னுடன் செல்லப் போலும்' என்று தலைவியின் குறிப்பைத் தலைவனுக்கு உரைத்தாள். 8. அருமை உரைத்தல் 1 201. மெல்லியல்) அங்ங்னம் தலைவியின் குறிப்பைத் தோழி சொல்ல அறிந்த தலைவன் 'நல்லாய் ! மெல்லியலுடைய கொங்கைகள் பெரிய, இடை நுடக்கத்தால் மின்னுக்கு நேரா உள; மெல்லிய அடிகள் பூவேபோல் இருக்கின்றன. வெம்மை உடைய காடு அவ்வடிக்குத் தகாததாய்த் தீயாய் இருக்கின்றது. அது அல்லாமல், எம்முடைய ஊர் தூரத்தில் இருக்கின்றது. அதனுல் நீ கருதியது பெரிதும் அரிது. நான் எப்படித் தலைவியைக் கொண்டு நீங்குவது” என்று தலைவன் போக்கு அருமையைத் தோழியிடம் கூறினன். 9. ஆதரம் கூறல் (202. பிணையும்) இங்ங்னம் போக்கு அருமை கூறின தலைவனிடம் ‘ஐயனே கல் நிறைந்த சுரமும் (காடும்) உன்னுடன் வந்தால் என்னுடைய தலைவிக்குக் குளிர்ந்த மருத நிலமும் பொய்கையும் போலும் இருக்கும் அல்லவோ! நீ இவ்வாறு அந்நியமாகக் கூறுவது என்னை ?' என்று தோழி தலைவியின் ஆதரம் கூறினள். 10. இறந்து பாடு உரைத்தல் (203. இங்கு அயல்) இங்ங்னம் தலைவனிடம் ஆதரம் கூறித் தோழி - நீ ஒரு தாமரைப் பொய்கை, அவள் அக்குளத்தில் வாழ்கின்ற மீன், அப்படி இருக்க உன்னுடன் வருவது பற்றி அயன் மை (அயலாம் தன்மை) கூறுகின்றதென்? செங்கயலுக்கு (மீனுக்கு)த் தாமரைக் குளம் அல்லது வேறு வேண்டப்படுவது ஒன்று உண்டோ என்று தலைவியின் இறந்துபடுதலைத் (குளத்தில் உள்ள மீன் குளத்தை விட்டுப் பிரிந்தால் இறந்துபடும் என்பதை)