பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. உடன் போக்கு ஆங்ா 51 தலைவனிடம் தெரிவித்தாள். (நீ உடன் கொண்டு போகா விட்டால் அலராலும், காவல் மிகுதியாலும் உன்னைப் பார்ப்பது அரிது. ஆதலின் தடம் துறந்த கயல் போல இறந்து படுவள். என்றபடி) H 11. கற்பு நலன் உரைத்தல் (204. தாயிற்சிறந்தன்று) இவ்வாறு தலைவனைப் போக்கு உடம்படுத்திய தோழிதலைவியிடம் சென்று'மகளிர்க்குப் பழிநீக்கிப் பாது காத்தலில் நாண் தாய்போலச் சிறந்தன்று; அத்தன்மைத்தாகிய நாண் திண்ணிய கற்புப் போலச் சிறப்புடையதன்று’ என்று உலகியல் கூறுபவளாய்த் தலைவி உடன் போக்குத் துணியக் கற்பு நலத்தை அவளுக்கு எடுத்துக் கூறினள். 12. துணிந்தமை கூறல் (205. குறப்பாவை) உலகியல் கூறுவாள் போன்று தலைவியைக் கற்பு வழியில் நிறுத்திய தோழி குறப்பாவாய் சென்று சென்று பிறக்க நேரிடினும் பின்னும் சென்று சேரத்தகும் தன்மையை உடைய தலைவர் உன்னுடைய கூந்தலில் இருக்கும் வேங்கைப் பூவுடன் கோங்கம் பூவையும் பாதிரிப்பூவையும் கலந்து புனைவதற்கு நினைத்துள்ளார்: என்று தலைவியிடம் கூறினள். கோங்கும் பாதிரியும் உள்ளது பாலை நிலம் ஆதலின் அந்நிலத்தில் உடன் கொண்டு போவதாக முடிவு செய்துள்ளார் என்பது கருத்து. 13. துணிவொடு வினுவல் (206. நிழல்தலை) அவ்வாறு தோழி தலைவனுடைய நினைவைச் சொல்லக் கேட்ட தலைவி நிழலிடம் இல்லாது தீர்ந்த வழியில் நீர் கிடையாது; கானகம் முழுதும் நரி கத்தும், அங்கு நெருப்பின் நுனிபோன்ற நுனியை உடைய பருக்கைக் கற்கள் உண்டென்று சொல்வர். அப்படிப் பட்ட வழியில் (தில்லை அம்பலத்தாரை வணங்காதவன்,ரப்