பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா அ திருக்கோவையார் உரைநடை போல) நமது தலைவர் நம்மை உடன் கொண்டு போவதற்கு யாது காரணம் ?' என்று தோழியை வினவினள். 14. போக்கு அறிவித்தல் (207. காயமும்) இப்பொழுது தலைவர் போகைக்குக் காரணம் என்ளுே? என்று கேட்ட தலைவிக்கு நீங்கள் இருவரும் உடம்பும் உயிரும் போல ஒருவரை ஒருவர் இன்றி அமையாத அன்பை உடையீர்; சிங்கமும் கொடிய விலங்குகளும் வழியில் உள்ளனவற்றைக் கருதி யான் தலைவரை வரவேண்டாம் என்று அவரிடம் கூறுவேன். அவ்வாறு என் சொற்படி வருதலை ஒழித்து, திருமணத்தை அவள் விரும்பினுல் கடல் சூழ்ந்த இந்நிலத்தையும் பொன் முதலாகிய எல்லாவற்றையும் பெற்ருலும் கூட உன்னை நமது தலைவருக்கு நம்மவர் கொடார். இதுதான் நீரும் மனிதரும் இல்லாத வழியிலே போதற்கு (சுரம் போக்குக்கு)க் காரணம்’ என்று தோழி தலைவனது போக்கை அறிவித்தாள். - 15. நாண் இழந்து வருந்தல் (208 மற்பாய்) உடன் கொண்டு போகைக்குக் காரணம் அறிந்த தலைவி, என்னுடன் ஒக்க வளர்ந்த திருவை உடைய நாணமானது தலைவர்மீது யான் வைத்த விருப்பம் இடையே புகுந்து தள்ள, நிலை குலைந்து கற்பாதிய கடிய காற்றினல் பிடுங்கப்பட்டு என்னை விட்டு நீங்கப் பெற்றது. இனி ஏழு பிறப்பிலும் மகளிர் குடியிற் பிறவா தொழிக’ எனக் கூறி வருந்தினள். 16. துணிவு எடுத்து உரைத்தல் [209. கம்பம்) இவ்வாறு கற்பு வழியில் தலைவியை நிறுத்தித் தலைவனிடம் சென்று, 'நம்பா ! நின்னேடு போது மிடத்து நீ செல்லும் கற்சுரம் தலைவியின் செம்பஞ்சை, நிதிப்பினும் நடுங்கும் மலர்போலும் சிற்றடிக்கு நல்ல