பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

вто திருக்கோவையார் உரைநடை என் தோழியை(தலைவியை)க் கொண்டு வந்தேன், காண்பாயாக’’ என்று தலைவியைக் கொண்டு சென்று: அவைெடு அவளைக் கூட்டினள். 20. ஒம்படுத்து உரைத்தல் 1213. பறந்திருந்து) அங்ங்னம் தலைவியைத் தலைவனிடம் கூட்டிய தோழி தலைவன் தலைவி இருவரையும் வலம் செய்து நின்று, *சிலம்பா! அறம் திருத்துதற்குக் காரணமாகிய உனது அருள் இவள் மாட்டு வேறுபடுமாயின் மறையின் திறமும் பிறழும், கடலும் வற்றிப் போகும். ஆதலால் இவளிடத்து உன் அருள் மாறுபடாமல் இவளைப் பாது காப்பாயாக’’ என்று தலைவியைத் தலைவனுக்கு ஒம்படுத்து உரைத்தனள். (தலைவியைத் தலைவனுக்குக் கையடை ஆக்கினள்.) 21. வழிப்படுத்து உரைத்தல் (214. ஈண்டோல்லை) அங்ங்னம் ஒம்படுத்து உரைத்த தோழி “ஆயமும் அன்னையும் உங்கள் பின் வராமல் இவ்விடத்தே நிறுத்தி, இவ்வூரின்கண் உண்டாகிய அலர் ஒருவாறு அடங்கப் பின்பு நான் அங்கு வந்து உங்களை விரைவில் காணக் கூடியதாகும். நீங்களும் திருவொடு சென்று துாரத்தில் உள்ள தில்லை நகரைச் சேர்வீராக’’ என்று இருவரையும் வழிப்படுத்திக் கூறினள். 22. மெல்லக் கொண்டு ஏகல் (215. பேணத்திருத்திய) தோழி இவர்களை விட்டுப் போகத் தலைவியை உடன் கொண்டு போகா நின்ற தலைவன் தலைவியை நோக்கிப் 'பெரிய ஊர்கள் நாம் போகும் வழியில் இருபக்கமும் ஒன்றுக்கொன்று நெருங்கி உள்ளன. முன்னக உள்ள காடுகள் நாம் காணும் வண்ணம் திருந்தச் செய்யப் பட்டன போலும். நீ பைய வருவாயாக' என்று கூறித் தலைவியை மெல்லக் கொண்டு சென்ருன்.