பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க சு. உடன்போக்கு இ க 23. அடல் எடுத்து உரைத்தல் (216. கொடித்தேர்) அங்ங்னம் தலைவியைக் கொண்டு சென்ற தலைவன் தாரத்தே சிலர் வருவதைக் கண்டு வருபவர் நின் ஐயன் மாராயின்’ அம்பலத்தாடும் சிவனுடைய திருவடியை ேென யாதவரைப் போல யான் அஞ்சுவேன். ஆனல் மறவர் (வீரர்) திரளும் வெய்ய, கரி நிரையும் அனைத்தும் திரண்டுவரினும் என் கையிலுள்ள வேலின் வாய்க்கு இரை போதாது. மங்கையே இதனை இவ்விடத்தே காண்பாயாக’ என்று தலைவியின் அச்சம் திர தன் அடல் (வலிமையை) எடுத்து உரைத்தான். 24. அயர்வு அகற்றல் (217. முன்னேன் அருள்) இவ்வாறு தலைவியின் அச்சத்தைத் தீர்த்துக் கொண்டு போகா நின்ற தலைவன் (எல்லார்க்கும் முன்னவனுடைய அருளை முற்பிறப்பில் நினையாத தீவினையாளர்க்குத் துன்பம் செய்யும்) இந்தப் பாலை நிலத்தை இப்பொழுதே நாம் கடந்து, என்னை உடை யான் கூத்தாடும் சிற்றம்பலத்தை இன்று சென்று காண் போம். இது அன்ருே நமக்கு வருகின்ற இன்பம். இனி நமக்கு ஒரு குறைவில்லை' என்று தலைவியின் அயர்வு (வழி வருத்தம்) தீரக் கூறினன். 25. நெறி விலக்கிக் கூறல் (218. விடலை உற்ருர்) தலைவியின் அயர்வை அகற்றிக் கொண்டு சென்ற தலைவனை, விடலாய் ! (காளைப் பருவத்தினனே) இனி நீங்கள் செல்லும் வழியில் நன்மக்கள் இல்லை. கொடிய வேடரே உள்ளார். நீ தனியை; இவளோ வழி வந்த வருத்தத்தால் வாடினுள். பொழுதும் சென்று விட்டது. இக் கொடிய சுரத்தை (L7 &ు நிலத்தை) இப்பொழுது கடப்பாரும் இல்லை. அதனல் இங்குத் தங்கிப் போகவும்’ என்று தலைவனிடம் அவ்விடத்து உள்ளோர் வழி விலக்கிக் கூறினர்.