பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ.உ திருக்கோவையார் உரைநடை 26. கண்டவர் மகிழ்தல் (219. அன்பு அனைத்து) அவ்வாறு நெறி விலக் குற்று வழி வருத்தம் தீர்ந்து தலைவனும் தலைவியும் செல்ல அன்பால் அனைத்து அவள் பின்னே ஆடவன் ஒருவன் செல்கின்ருன். அவன் பின்னே அவள் நெடும்பொழுது செல்கின் ருள். இப்படிச் செல்வதால் இவர்கள் செயல் இப்பெரிய சுரத்தைக் கடந்து போகிறபடியாயில்லை. மருத நிலத்தில் மலரிடத்தே உள்ள குளிர்ந்த தேனை உண்ட வண்டுச் சாதிகளைப் போலே விளங்கா நின்ற நாடகமாய் இருக் கின்றது' என்று தலைவன் தலைவி செல்வதைக் கண் டவர்கள் தம்முள் பேசி மகிழ்ந்தனர். 27. வழி விளையாடல் (220. கண்கள் தம்மால்) அங்ங்னம் கண்டவர் மகிழத் தலைவியைக் கொண்டு சென்ற தலைவன் தலைவியை நோக்கி, வழிசெல் வருத்தத்தினுல் நெகிழ்ந்த மேனியை உடைய உன்னைக் கண்டு நான் என் கண்களாற் கொண்ட பயனைக் கொண்டனன். இனி, கடம்பூர்த் தலத்தில் உள்ள குளிர்ந்த தடாகம் போல இக்கடிய காடானது தட்பம் (குளிர்ச்சி) அடையும் அளவும் உன்னுடைய பண்போலும் மெல்லிய மொழியைச் செவி நிறைய யான் பருகும் வண்ணம் இவ்விடத்து வருவாயாக’ என்று கூறித் தலைவி யுடன் விளையாடினன். (ஆதித்தன் வெம்மை தணியும் அளவும் நிழலில் இருந்து சில வார்த்தையை என் செவிக்கு இனிதாகச் சொல்லுவாயாக என்றபடி.) 28. நகர் அணிமை கூறல் (221. மின்தங்கு) இவ்வாறு விளையாடித் தலைவன். தலைவியுடன் செல் வதைக் கண்டவர்கள் 'தில்லைச் சிற்றம்பலத்தை உடைய வரது குன்றத்தைக் கடந்து அப்பால் சிறிது வழி நடந்தால், அழகிய தாமரைக் கிடங்கும், வள்ளைப் பாடலைப் பாடும் மகளிர் சேரும் பூொய்கைகளும் சூழ்ந்த தில்லைநகர் தோன்றும். அத்துணையும் கடிது செல்வீராக’ என்று கூறினர்.