பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. உடன் போக்கு க1 . 29. நகர் காட்டல் (222. மின்போல்) நகரணிமை கூறக் கேட்டுத் தலைவியுடன் செல்லா நின்ற தலைவன், 'சிவபிரானைப் போலப் பிறையை அணிந்த மாளிகைகள் அவரைப் போலச் சூலத்தவுமாய், நம்முன் தோன்றும் நல்ல பெரிய நகர் தான் (ஒளியானும் நுடக்கத்தா னும் மின் போன்ற கொடிகள் வானமாகிய கடலுள் திரையைப் பரப்பப் பொன் ல்ை இயன்ற மதில் மேருமலையைக் காட்டப் பொலிகின்ற) புலியூர் என்னும் நம்முடைய நகராம்' என்று தன்னுடைய நகரைத் தலைவிக்குக் காட்டி 'நீ தொழுவாயாக’ என்று 30. பதி பரிசு உரைத்தல் (223. செய்குன்று) தன் நகரைக் காட்டிச் சென்று அந்த நகரிடைப் புக்கு, 'உவை செய் குன்றுகள், இவை நல்ல மலர் வாவிகள்; அவை சந்திரன் இளைப்பாறும் பொழில்கள்; உவ்விடம் உலகத்தில் பொய் முதலாகிய குற்றங்கள் கெட மறையவர் மறை சொல்லுமிடம், இந்திடம் அம்பலவர்க்கு இருப்பிடம்” என்று குன்றுகள், வாவிகள், பொழில்கள், மாளிகைகள், தெய்வப்பதி இவை யெல்லாம் தனித்தனி காட்டி, இதுகாண் நம்பதியாவது எனத் தலைவிக்குத் தலைவன் பதி பரிசு (பதியின் தன்மை) உரைத்தனன். ( இவை தன்முன் உள்ளவை. உவை' சிறிது அப்பாலுள்ளவை. அவை' துார த்திலுள்ளவை.) 31. செவிலி தேடல் (224. மயிலென்) தலைவனையும் "தலைவியையும் வழி அனுப்பி வந்து பிரிவு ஆற்ருது கவலா நின்ற தோழியை, 'மயிலெனப் பேர்ந்து, கொடிபோல் நுடங்கி, மான் போல் விழித்து, குயிலெனப் பேசும் என் பிள்ளை எங்கே? நீ இன்று வருந்தி நிற்பது என்ன காரணம்?' என்று செவிலித் தாய் (தலைவியைப் பற்றி) வினவினள்.