பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. உடன் போக்கு எடு 34. கவன்று உரைத்தல் (227. முறுவல்) இவ்வாறு தலைவியின் கற்பு நிலைக்கு இரங்கி நற்ருயுடன் சொன்ன செவிலி அன்று உள்ளத்தில் ஒன்றை வைத்துப் புன்சிரிப்புடன் என் முலையை முத்தம் கொண்டு என்னை முழுவித் தழுவிக்கொண்டு சிறு விரகுகள் செய்தன எல்லாம் வலிய காட்டைத் தான் செல்ல வேண்டிப்போலும். அதை நான் அப்பொழுதே அறியப் பெற்றிலேன் என்று தலைவியின் நிலையை நினைந்து கவலைப்பட்டாள். 35. அடி நினைந்து இரங்கல் (228. தாமேதமக்கு) தலைவியின் நிலைமை நினைந்து கவலைப்பட்ட செவிலி 'அனிச்சம் பூ மேல் மிதிப்பினும் ஆற்ருது பதைத் துப் பொங்கா நின்ற அடிகள் இன்று நங்கையே! எரியும் தி மேல் பதித்த வேல் போலச் செறிந்த காட்டின்கண் வைத்து நடக்க இயலுமோ ? தீவினை செய்த நான் பெற்ற என் தாயே! ஆண்டு நீ என் செய்கின் ருய்?' என்று தலைவியை நினைந்து இரங்கினள். 36. நற்ருய்க்கு உரைத்தல் (229. தழுவினகை) அவ்வாறு தலைவியின் அடியை நினைந்து இரங்கின செவிலி தன்னைத் தழுவின என் கை சிறிது சோருமாயின் தான் தனியள் என்றே கருதி உள்ளம் தளர்ந்து அழும் தொழிலைச் செய்யும் பேதையின் (தலைவியின்) அறிவு இப்பொழுது என்னை மனம் வாடப் பண்ணிவிட்டது . என்று அவள் உடன் போனமை ஆற்ருது நற்ருய்க்குச் செவிலி உரை த்தாள். 37. நற்ருய் வருந்தல் (230. யாழியல்) உடன் போனதைக் கேட்ட நற்ருய் மெல்லிய மொழியையும் வலிய மனத்தையும் உடைய ப்ேதை (தலைவி) ஓர் அயலான் பின்னே தன் தோழியை விட்டு என்னையும் அதற்கு முன்னே துறந்து சத்துருக்கள்