பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி அா திருக்கோவையார் உரைநடை முன்னே இவ்வூரிலுள்ளார் அலர் துாற்றப் போயினள். இனி எங்ங்னம் ஆற்றுவேன்' என்று கூறிப் பிரிவாற்ருது 38. கிளிமொழிக்கு இரங்கல் (231. கொன்னுண்) அவ்வாறு தலைவியின் பிரிவாற்ருது வருந்திய நற்ருய் அக்கொடியாள் (தலைவி) மலை வழியில் எவ்வண்ணம் சென்ருள், அங்கு எவ்வண்ணம் தங்குவாள் என்று நான் கூற, என்னுடைய அன்னை போயினுள் அவள் எவ்விடத்து உள்ளாள்; இனி என்னைப் பருந்து கொன்று விடும்' என்ற அக்கிளியின் சொல் தலைவியின் போக்குடன் என் நெஞ்சை அறுக்கின்றது' எனக் கூறிக் கிளிமொழிக்கு இரங்கினள். 39. சுடரோடு இரத்தல் (232. பெற்றேன்) கிளிமொழி கேட்டு இரங்கிய நற்ருய் பெற்ற என்னுடன் தன் கிளி இருந்து வருந்த அதனையும் பிரிந்து அறிவு முதிர்ந்து தீ வீசும் காட்டில் சென்ற தலைவியின் முகத்தை, சூரிய மூர்த் தியே (நின் கதிர்களால் வாட்டாமல்) குளிர்ந்த தாமரை போல மலர்த்துவாயாக, உன்னை யான் இரந்தேன் இதை' என்று சுடரொடு (சூரியனை) வேண்டினுள். 40. பருவ நினைந்து கவறல் (233. வைம்மலர்) இங்ங்னம் சுடரொடு இரந்து வருந்திய நற்ருய் 'என்னுடைய மயில் போன்ற வாட்கண்ணி (தலைவி) ஊரற்கு (தலைவனுக்கு)த் தான் செய்ய வேண்டிய குற்றேவல்களைக் கற்பிக்கு முதுபெண்டிருமின்றித் தானே செய்ய வல்லளாமோ ! ஆண் டென் செய்கின் ருள்' என்று அவளது பருவம் நினைந்து கவலை உற்ருள். 41. நாடத் துணிதல் (234. வேயின) தலைவியின் பருவம் நினைந்து கவலை அடைந்த நற்ருய்க்கு 'நீ கவன்று மெலிய வேண்டா, நான்