பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H திருக்கோவையார் உரைநடைئي 5Tي 44. சுவடுகண் டறிதல் (237. தெள்வன் புனல்) சோதிடம் பெற்றுத் தலைவியைத் தேடிச் சென்ற செவிலி :முள்ளையும் வலிய பரலையும் உடைய இக் காட்டி ற் கிடந்த இவை தீவினையை யுடைய யான் எடுத்து வளர்த்தவளுடைய சிறிய அடிச் சுவடாம்; அங்குள்ளவை அக்கள் வகிைய யானை போலும் வலியை யுடையானுடைய (தலைவனுடைய) அடிச்சுவடாம் என்று உய்த்துணர்ந்து 45. சுவடு கண்டு இரங்கல் (238. பாலொத்த) அவ்வாறு சுவடு கண்டு அறிந்து அவ்விடத்தே நின்ற செவிலி, அழகிய படுக்கையை மிதிக்கினும் நடுங்கும் எம்மகளின் அடிகள் முன்பு கொப்புளம் கொள் ளும், அத்தன்மையை உடைய அடிமலர்கள் இன்று வேல் போலும் வெய்ய பரலை உடைய காட்டின்கண் ஒரு விட2லயின் பின் போதற்குத் தக்கனவாய் எவ்வாறு ஆற்றவல்ல ஆயின ' என்று அடிச்சுவடு கண்டு வருந்தி இரங்கி நின் ருள். 46. வேட்ட மாதரைக் கேட்டல் (239. பேதைப்பருவம்) அங்ங்னம் சுவடு கண்டு இரங்கின. செவிலி அது வழியாகச் செல்லும் போது பொலிவு பெற்ற தொழி லினையும் புலிப்பல் தாலியையும் உடைய ஒரு வேட்ட மாதைக் கண்டு வேட்ட மாதே! எம் மகளுக்குப் பேதைப் பருவம் கழிந்தது இந்தக் காட்டில் போந்த பின்னர், முன்பு அறியாப் பருவத்தினளாய் இருந்தபோது, என்னைச் சிறிது நீங்கினும் காற்றில் அகப்பட்ட கொடி போல் நடுங்கினவள் இப்பொழுது ஓர் அயலாைேடு இக்காட்டு வழியே போயினுள்; அவளை நீ கண்டாயோ? அவள் எவ்வண்ணம் போயினுள் ? கண்டாயாகிற் சொல்லுவாயாக’’ என்று அவ்லேட்ட மாதைக் கேட்டனள்.