பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CD திருக்கோவையார் உரைநடை وت கையையும், மெல்லிய மான்தோல் பொருந்திய தோலையும், வெள்ளை நூலையும். மேக முழக்கம் போலும் மறை ஒலியையும் கொண்டவராய் இவ்வழியில் வருபவர்களே ! ஒரு மான் தில்லையம்பலத்தான் கரத்தில் உள்ள மான்போல நோக்கத் தளாய் , மயில்போல அசைந்த சாயலை உடையவளாய் (வருத்தும் சுரமே கண்டு துன்புற) ஒரு ஏந்தலோடு தும் எதிரே வந்தாளோ ? சொல்விராக’’ என்று எதிரே வந்த வேதியரை வினவினள். 51. புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினுவல் (244. மீண்டார் என; இங்ங்னம் வேதியரை வினவி அவ்வழியாகச் செல்லா நின்ற செவிலி உங்கள் இருவரைக் கண்டு என்னல் தேடப்படுகின்றவர் மீண்டார் என்று கருதி மகிழ்ந்தேன்; அது கிடக்க, இவ்வாறு நும்மோடு ஒத்த ஒழுக்கத்தினராய் முன்னே இருவர் போகக் கண்டீரோ ? சொல்லுங்கள்' என்று கேட்க, அவர் இருவரில் ஆண்மகன் (ஆளி) சிங்கம் போன்றவனைக் கண்டேன் என்று கூறித் தன் னுடன் வந்தவளை நோக்கித் துாண்டப்படாத விளக்கினை ஒப்பவளே ! அவன் அயலில் அன்னை சொல்லியது யாது ? அதனை நீ அவளுக்குச் (செவிலி) சொல்லுவாயாக’’ என்றனன். இது பிறர்மனை நோக்காத பேராண் மை. 52. வியந்து உரைத்தல் (245. பூங்கயிலாய) இவ்வாறு புணர்ந்துடன் வருவோரை வினவி அது வழியாகச் செல்லா நின்ற செவிலி குற்ற மில்லாத என் சிறியாள் நின்றது இவ்விடத்தே, தம்மை எதிர்ந்து வந்த வேங்கையின் வாயில் தலைவன் தனது பெரிய கையை மடுத்து, விழுந்து கிடந்து அலறும் வண்ணம் தன் கை வேலில்ை அப்புலியைக் கொன்றது. அவ்விடத்தே, ஆதலால் அவர்கள் இருவரும் போயின வழி இதுவே என்று கூறித் தலைவன் செய்கையை