பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. உடன்போக்கு அ. து '.. இயைபு எடுத்து உரைத்தல் (246. மின் தோத்திடு) அவ்வாறு வேங்கை பட்டதைக் கண்டு தலைவனது ஆற்றலை வியந்து அது வழியாகச் சென்ற செவிலி தான் தேடி வந்தவர்களைக் கண்டீரோ ? எனத் தன் எதிரே வந்தவர்களை வினவ அவர்கள் 'அன்னய் நீ சொன்ன இருவரையும் குன்றத் திடைக் கண்டோம். அவ்விரு வரும் ஒருவரோடு ஒருவர் அனைந்து சென்றதாலும் அவன்றன் கழலும் அவடன் சிலம்பும் அவனது வெண் பட்டும் அவளது செம்பட்டும் விளங்க ஒருவடிவை ஒத் தலாலும் அவர்களை உமையாளோடு ஒன்ரும் சிவபிரான் (உமாதேவி பங்களுகிய மகாதேவன்) என்றே கருதி நாங்கள் எல்லாரும் பெரிதும் அவ்வழகைத்தொழ நினைந் தோம். அவர்களை அங்ங்னம் கண்டதால் அந்நன்மை எத்தன்மையதோர் நன்மை தான் சொல்லலாவது ஒன் றன்று' என்று அவர் (தலைவன், தலைவி) இயைபை எடுத்துக் கூறினர்கள். 54. மீள உரைத்தல் (247. மீள்வது) இவ்வாறு எதிர் வந்தவர்கள் தலைவன் தலைவியி னுட்ைய இயைபை எடுத்துக் கூறி 'மதயானையைக் கிழித்த நாயகனுடனே தலைவி இந்நெடிய காட்டைக் கட்ந்து ஒர் இடுக்கண் இன்றித் தில்லையின் எல்லையைச் சேர்வாள். அதனல் அன்னையே! நீ செயற்பாலது மீள்வதே செல்வதன்று' என்று தேடிச் செல்லா நின்ற செவிலி மீண்டு போம்படி கூறினர்கள். 55. உலகு இயல்பு உரைத்தல் (248. சுரும்பிவர்) இவ்வாறு மீளக் கூறவும் மீளாமல் கவலையுடன் நின்ற செவிலிக்குச் 'சந்தனமும், கடல் முத்தும் வெண் சங்கும் எந்தத் தேசத்திலும் தாம் பிறந்த இடங்களுக்கு யாதும் பயன்படாது, தம்மை அணிவாரிடத்தே சென்று அவர் மெய்க்கு அணியாகும்." அதுபோல மகளிரும் திரு. - 6