பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. வரைபொருட் பிரிதல் அ. அ. நோக்கி நீ சென்று அவள் ஐயன்மாரை முலைவில் கே. பாயாக என நீ அவள் வேண்டிக் குறை உடையை பாய் நிற்றலாலும், உன் கல்வி மிகுதியாலும், செல் வ லம் (இரு முது குரவர் உன்னைக் கொண்டாடுதல்) ன் குலச் சிறப்பாலும், நீ அனுப்ப வந்த பெரியோர்க வருடைய அறிவோடு கூடிய ஒழுக்கத்தாலும், நீ அவளை அடைதற்குத் தக்க நீதி இருப்பதாலும் (நீதி உள்ளப் பொருத்தம் உள்வழி மருது கொடுத்தல்) நின் வரவை மர் ஏற்றுக் கொள்வர் அல்லது விலை கூறுவராயின் அவளுக்கு ஏழ் உலகம் விலை போதாது' என்று தலைவ கனிடம் தோழி முலைவிலை கூறினள். 2. வருமது கூறி வரைவுடம் படுத்தல் (267. வடுத்தன) இவ்வாறு முலைவிலை கூறிய தோழி “நீ வரைவொடு வாராது இரவருள் செய்யா நின்ற இது கெர்ப்பத்துக்கு ஏதுவானுல் நம் எல்லார்க்கும் பொல்லாதாம்; அது படாமல் எமரால் கேட்கப்பட்ட பொருள்கள் விரையக் கொண்டு வந்து அவளை வரைந்து கொள்வாயாக' என்று தோழி தலைவனிடம் கூறி வரைவு உடம்படுத் தினள். 3. வரைபொருட் பிரிவை யுரையெனக் கூறல் (268. குன்றம்) அவ்வாறு வரைவுடம் படுத்தின தோழிக்கு : இனி நான் குன்றத்திடை உள்ள காட்டைக் கடந்து போய் துமர் சொல்லும் நிதியைத் தேடிக் கொண்டு வந்து தும் மிடம் சேர்வேன். நீ சென்று தலைவியை நான் வரும் வரையில் வாடாத வண்ணம் இருக்கும்படி சொல்ல வேண்டுவன சொல்லுவாயாக, ய்ர்ன் பிரிந்தமை கூறி அவளை ஆற்றுவித்துக் கொண்டிருப்பாயாக' எனத் தலைவன் வரை பொருட்குப் பிரிகின்றமையைக் கூறினன். 4. நீயே கூறென்றல் (269. கேழேவரை) இவ்வாறு பிரிவு அறிவிப்புக் கூறின தலைவனுக்கு 'நீ இரவு வரினுமீ பகல் பிரிந்து போவாய்' என்று