பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ை() திருக்கோவையார் உரைநடை அதனையே உட்கொண்டு வாழேன்’ என இருக்கும் தலைவியை அவளுடைய நுத லும் தோளும் முதலாயின வற்றைத் தடவி நிமிடமளவும் நான் தாழேன்' (தாமதிக்க மாட்டேன்) என்னும் உரையை முன்னதாகச் சொல்லி ஏகுவாயாக’’ என்று தோழி தலைவியின் பிரிவாற் ருமையைத் தலைவனிடம் கூறினள். 5. சொல்லாதேகல் (270. வருட்டின்) நீயே கூறென்று சொன்ன தோழிக்குத் தலைவியின் துதலும் தோளும் முதலாயினவற்றைத் தைவந்து (தடவி) ஒன்று சொல்லக் குறிப்பேயிைன் இஃது என் கருதிச் செய்கின்ருனென்று மயங்குவாள்; இன் சொல் லுடன் ஒன்று சொல்லலுறுவேளுயின், அக்குறிப் பறிந்து உள்ளம் நடுங்குவாள்; இனி வெளிப்படப் பிரிவுணர்த்திப் பொருள் தேடி முடித்துக் கடிதில் வருவேனென்று சூளுற்றுத் தெரிவிப்பேனுயின் மனம் மகிழ்ந்து தேருள் (தெளியாள்) இவ்வாருெழிய அறிவிக்கும் வகை வேறில்லை. அதனல், அவளுக்கு என் பிரிவை எவ்வண்ணம் சொல்லிப் போவேன்; ஒருவாற்ருனு மரிது; நான் வரைய வருவேன். நான் வருமளவும் தலைவியை நீ ஆற்றுவித்துக் கொண்டிருப்பா யாக’ என்று தோழியிடம் கூறித் தலைவன் தலைவியிடம் சொல்லாது பிரிந்து போயினன். 6. பிரிந்தமை கூறல் (271. கல்லாய் இவ்வாறு முன்னின்று பிரிவுணர்த்த மாட்டாமை யால், தலைவன்' சொல்லாது பிரியா நிற்பத், தோழி தலைவியிடம் சென்று நல்லாய்! நம் தலைவர் நம்மவரால் கேட்கப்பட்ட எல்லா நிதியையும் ஒருங்கே கொண்டு வர வேண்டி அழல் உடைய காட்டைக் கடக்க இன்று சென்ருர். அதல்ை நமக்கு வந்ததனை யாதென்று சொல்லுவேன். கேட்டதைக் கொண்டு வரச் சென்ரு ராதலின் இன்பம் என்பேனே ? அழற்காட்டைக் கடக்கச்