பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. வரைபொருட் பிரிதல் to Ho சென்றமையால் துன்பம் என் பேனே ? என்று பொதுப் படக் கூறுவாள் போன்று, வரைவு காரணமாகப் பிரிந்தா ராதலின் அது நமக்கு இன்பமே' என்று கூறித் தலைவியை ஆற்றுவித்தாள். 7. நெஞ்சொடு கூறல் (272. அருந்தும்) சொல்லாது பிரிந்தமை கூறக் கேட்ட தலைவி வருந்தா நின்று நமக்கு ஏதம் பயக்கும் ஒழுக்கம் ஒழிந்து, குற்றமில்லாத ஒழுக்கத்தை கைப்பற்றிச் சென்ற தலைவனது நீதி நம்மைக் கெடுக்கும் என்று, மட நெஞ்சமே ! நீ கருதினுல் யாம் இன்புற்று வாழும் உபாயம் வேறு யாது' என்று தன் நெஞ்சொடு கூறினள். 8. நெஞ்சொடு வருந்தல் (273. ஏர்ப்பின்னை) அங்ங்னம் தன் நெஞ்சொடு கூறின தலைவி அன்று அவரை (தலைவரை) விடாது என்னை விட்டு அவரது தேர்ப்பின் சென்ற நெஞ்சம் இன்றும் அவ்வாறு செய்யாது என்னை வருத்துகின்றது. ஏளுே அறிகிலேன்' என்று தன் நெஞ் சொடு வருந்தினஸ் . 9. வருத்தங் கண்டுரைத்தல் (274. கானமர்) தலைவி தன் நெஞ்சொடு வருந்துவதைக் கண்ட தோழி தமது துணையாம் மாதர்களின் கண்ணைத் தாம் எய்ய வந்த மானின் கண் நினைவு படுத்தலால் அம்பை எய்யாத குரவர்களின் மலைக்கு உரியவர் நம் தலைவரா தலின், அவர் உனக்குத் துன்பத்தைத் தரமாட்டார். நீ வருந்தற்க அவர் தாழாது விரைய வரை வொடு வருவர்' என்று தலைவியின் வருத்தம் தீர உரைத்தன ள். 10. வழியொழுகி வற்புறுத்தல் 1275. மதுமலர் இவ்வாறு தலைமகளது வருத்தம் கண்ட தோழி அன்று நீ அவரை (தலைவண்ர)ப் புதிதாகப் பார்த்த