பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. வரைபொருட் பிரிதல் சி ை 13. தேருது புலம்பல் [278. மன்செய்த) இங்ங்னம் தலைவனது வாய்மை கூறித் தலைவியின் வருத்தத்தைத் தனியா நின்ற தோழிக்கு 'நான் அவர் கூறிய மீெர்ழியின்படி மெய்ம்மை கண்டு வைத்தும் என் நெஞ்சமும் நிறையும் எனக்கு அடங்கி நிற்கின்றில. அதுவுமன்றி என் இனிய உயிரும் (தில்லையை உருதார் போல) வருத்தம் பொறுத்தல் அரிதாக இருக்கின்றது. இவ்வாருக இருக்கும் காரணம் நான் முன்செய்த தீவினையோ, அல்லது காலத்தின் கூத்தோ அறிகின்றி லேன்' என்று சொல்லித் தலைவி தன் மனம் தேருது புலம்பினள். 14. காலமறைத்துரைத்தல் (279. கருந்தினை] அங்ங்னம் தே ருது புலம்பி நின்ற தலைவி காந்தள் கருவுறக் கண்டு இது தலைவர் வரவு குறித்த கார்கால மென்று கலங்கா நிற்பத், 'தினைப்பயிர் ஒம்ப நம்முடைய ஐயன்மார் கடவுளைப் பரவ அக் கடவுள் ஆணையால் கால மன்றியும் மேகங்கள் நீரைச் சொரிந்தன. அதனை அறியாது அதனைக் கார் என்று கருதி இப்பரங்குன்றின் கண் காந்தள் மலர்கள் மலர்ந்தன. நீ அதனுல் கார் காலம் என்று அஞ்ச வேண்டாம் இது தெய்வமழை' என்று தோழி தலைவியை ஆற்றுவிக்க வேண்டிக் காலம் மறைத்துக் கூறினள். 15. தூது வரவுரைத்தல் (280. வென்றவர்) அங்ங் ைம் காலம் மறைத்த தோழி ஒரு துாது வந்திருக்கின்றது. அத்துது நம்மைப் பிரிந்து சென்றவர் அனுப்பின துதோ, அல்லது நமக்குத் துன்பத்தைத் தரும் அயலார் அனுப்பின து தோ அறியேன்' என்று தலைவியிடம் கூறினள். 16. தூது கண்டழுங்கல் (281. வருவன) தூது வரவு கேட்ட தலைவி அயலவருக்குத்