பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது சி திருக்கோவையார் உரைநடை து.ாதுகள் வருவன போவனவாயிருக்கின்றன. என்னிட ம் இன்பக் கலவிகளை முன் செய்து பின் எனது ஆவியைத் தாம் கொண்டுபோய், என் நெஞ்சில் தம்மை இருத்தின காதலர் இன்று ஏதுசெய்யக் கருதி வாரா திருக்கின்றனர் அறிகிலேன்' என்று ஏதிலார் துTது கண்டு அழுங்கினள். 17. மெலிவு கண்டு செவிலி கூறல் (282. வேயின) இவ்வண்ணம் அழுங்கி நின்ற தலைவியைச் செவிலி எதிர்ப்பட்டு அடி முதல் முடி வரை நோக்கி 'இவள் மென் தோள் மெலிந்து, ஒளிவாடி, விழி தன் இயல்பு இழந்து வேரு ய், முன்பிருந்த தன்மையள் அல்லள் ஆயினுள். இவள் முருக வேளின் ஆட்சியிற் பட்டனள் போலும் அறிகிலேன்' என்று தலைவியின் மெலிவு கண்டு கூறினுள். 18. கட்டுவைப்பித்தல் 1283. சுணங்குற்ற) தலைவியின் மெலிவு கண்ட செவிலி இவளுடைய கொங்கைகள் சூதின் (சொக் கட்டான் காயின்) வடிவைப் பொருந்தின இல்லை; இவள் பேச்சு, குதலைமை நீங்கி விளங்குதலை உற்றது இல்லை; நன்மை தீமை அறியும் பருவத்தை இவள் அடைந்திலள். இவள் இளமை இவ்வாறு இருக்கின்றது. அன்னைமீர் இவளுக்கு உற்ற நோயைத் தெளிய அறிந்து சொல்லுங்கள்' என்று கட்டுவித்திக்கு உரைத்துக் கட்டு வைப்பியா நின்ருள். 19. கலக்கமுற்று நிற்றல் (284. மாட்டி அன்றே) இங்ங்னம் செவிலி கட்டு வைப்பியா நிற்ப,*'இவள் (கட்டுவித்தி) தன் உள்ளம் ஓடியவாறு முழுதையும் புலப் படுத்தி, அலர் துாற்றி அயலார் அன்று மொழியாத @a என்பது தலைவியாகக் கொண்டால் இச் செய்யுள் தோழியின் கூற்ருகும்.