பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H திருக்கோவையார் உரைநடைھیے Fss لو، உபாயத்தைக் கருதும் உன்னைப் போல அறிவுடையான இவ்வுலகத் தில் இப்பொழுது யாரும் இல்லை போலும் தெய்வமே !' என்று அறத்தொடு நின்ற திறத்தினில் தோழி வெறி விலக்கிள்ை (நீரிடை ஒருவன் வந்து உதவினது குறிப்பினுல் வெறி விலக்குதலாகும்.) 28. செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்றல் (293. மனக்களி) இங்ங்னம் தோழி வெறி விலக்கி நிற்ப நீ வெறி விலக்குதற்குக் காரணம் யாது என்று கேட்ட செவிலிக்கு * நீ போய் கயிலைக்கண் உள்ள நம்புனம் காக்கச் சொல்ல, நாங்கள் போய்த் தினைக்கிளி கடியா நின்ருேம். அப்போது அவ்விடத்து ஒரு யானை வந்து நின் மகளை ஏதம் செய்யப் புக்கது. அது கண்டு அருளுடையான் ஒருவன் ஓடிவந்து அனைத்துப்பிறிதொன்றும் சிந்தியாமல் யானை யைக் கடிந்து அவளது உயிர் கொடுத்துப் போயின்ை; அறியாப் பருவத்து நிகழ்ந்ததனை இன்று அறியும் பருவம் ஆதலால் உற்ருர்க்கு உரியர் பொற்ருெடி மகளிர் என்பதனை உட்கொண்டு இவ்வாறு (த2லவி) உள் மெலியா நின்ருள்; இனி அடுப்பது செய்வாயாக' என்று தோழி செவிலிக்கு அறத் தொடு நின்ருள். 29. நற்ருய்க்குச் செவிலி அறத்தொடு நிற்றல் (294. இளையாள்) இங்ங்னம் தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட செவிலி கயிலைக்கண் பயிலும் திருவாட்டியாம் இளைய ளாகிய இவளை என் சொல்லிப் புகழுவோம்; முன் எழும் இரண்டு எயிறு (பற்கள்) முளையாத இளமைப் பருவத் திலேயே அறிவு முதிர்ந்தாள் இவள் என்று தலைவியின் கற்பு மிகுதி தோன்ற நற்ருய்க்கு அறத்தொடு நின்ருள். 30. தேர்வரவுகூறல் (295. கள்ளினம்) இங்ங்னம் நற்ருய்க்குச் செவிலி அறத்தொடு நிற்ப, அந்நிலையில் புள்ளினமும் கடல் திரையும், மங்கலம்