பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கO உ திருக்கோவையார் உரைநடை அவள்மேல் வைத்த காதலால் அவளது பொய் போலும் இடை இறும் என்று கருதிப் பூனைப் பூட்டி அணியான். மெல்லடி நோதல் அஞ்சித் தவிசை மிதிக்கும் போதும் மலரின் அன்றி மிதிப்பவிடான்; வண்டு மொய்த்தல் அஞ்சிக் குழலில் மலரை வையான். இவ்ை சொல்லு வானேன்! பொறையாம் (பாரமாம்) என்று நுதலில் பொட்டையும் இடான்” என்று தலைவனுடைய காதல் மிகுதியைக் கூறினள். 6. கற்பறிவித்தல் (304. தெய்வம்) தலைவனுடைய காதல் மிகுதியைக் கூறின. செவிலி, “அது கிடக்க, தலைவனை ஒழிய வேருெரு தெய்வத்தைத் தலைவி பணிந்து அறியாள்; முன்னின்று திறை கொடாத பகைவர் வந்து பணியும் வண்ணம் தலைவன் வினைவயின் திறை கொள்ளச் சென்ருலும் திறை கொண்டு வந்து அவளது (தலைவியின்) இல்லத்தல்லது ஆண்டுத் தங்கி அறியான். பெருங்குலத்துப் பிறந்த துரயோரது இயல்பு இத்தன்மையது' என்று கூறி நற்ருய்க்குத் தலைவியின் கற்பைத் தெரிவித்தன ள். 7. கற்புப் பயப்புரைத்தல் (805. சிற்பம்) இங்ங்னம் கற்பு அறிவித்த செவிலி தலைவியின் கற்பு அந்திக் காலத்து உளதாகிய வடமீனையும் (அருந் ததியையும்) வெல்லும்; அதல்ை தலைவன் ஊர்ந்து செல்லும் களிறும் வினைவயின் சென்ருல் அவ்வினையை முடித்துக் கொடுத்து வந்து தலைவன் இல்லில் பந்தி இடத்தல்லது ஆண்டுத் தங்காது' என்று நற்ருய்க்குத் தலைவியின் கற்புப் பயந்த அற்புதத்தை எடுத்து உரைத்தாள். (அந்திக் காலத்துக் தற்புடை மகளிரால் தொழப் படுவதால் அந்திவாய் வடமீன் என்ருள்.) 8. மருவுதல் உரைத்தல் (306. மன்னவன்) 4 இவ்வாறு கற்புப் புயப்பு உரைத்த செவிலி பெரு நில மன்னல்ை பகை முனைமேல் ஏவப்பட்டுச் சென்ருலும்