பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.க. மணம் சிறப்புரைத்தல் க0 ஆம் குறிப்பு : பாட்டு 383 முதல் இப்பாட்டு முடிய பத்தொன் பதும் அறத்தொடு கில்ேயினேயும், அதன் பின்னர் வரைதலேயும் குறித்தனவாகும். இதனுடன் அகத்தினேயில் மிகத் திகழும் "இன்ப்க் கலவி இன்பக் களவு முற்றிற்று. 81 ஆம் பாட்டு முதல் இப்பாட்டு (300) ஈருக தோழியால் ஆய கூட்டம். 3. வழிபாடு கூறல் (301. சீரியல்) மணம் செய்த பின்னர் மணமனை காண வந்த செவிலிக்கு அன்னுய் ! இத்தில்லையை வணங்கும் நம் காவலரானவர் (தலைவர்) சீர்மை இயலும் உயிரும் உடம்பும் போல ஒருவரை ஒருவர் இன்றியமையாமையால் தலைவியின் கருத்தைக் கடவார்; தாமரைப் பூவைச் சேர்ந்த தேனும் சந்தன மரமும் போல இயைந்து, (இடமும் இடத்து நிகழும் பொருளுமாய்) இவளது வழி ப்ாட்டின் கண்ணே தலைவர் நிற்கின்ருர்” என்று தலைவன் தலைவியின்வழி ஒழுகி நின்றதைத் தோழி கூறினள். (ஆவியும் தேனும் தலைவிக்கு உவமையாகவும், யாக்கையும் (உடலும்) சந்தும் (சந்தன மரமும்) தலைவனுக்கு உவமையாகவும் வந்துள.) 4. வாழ்க்கை நலம் கூறல் (802. தொண்டினம்) மணமனை கண்ட செவிலி மகிழ்வோடு மனைக் கிழத்தி யிடம் (நற்ருயிடம்) சென்று : நின் மகளுடைய இல்வாழ்க்கை நலத்திற்கு உவமை கூறின், நின்னுடைய இல்வாழ்க்கை நலமல்லது வேறு உவமை இல்லை ; எப்படி என்ருல் அவளது இல்லம் நம் இல்லத்தோடு ஒக்கும்; அவள் நின்னெடு ஒக்கும், திண்தோளவன் (தலைவன்) நின் கொழுநளுேடு ஒக்கும். அவளைப் பணிந்து குற்றேவல் செய்பவள் என்ைேடு ஒக்கும் அவளின் அயலார் நம்முடைய அயலாரொடு ஒப்பார்” என்று தலைவியின் வாழ்க்கை நலத்தைக் கூறினள் 5 காதல் கட்டுரைத்தல் (303. போட்டணி) தலைவியின் இல்வாழ்க்கிை நலம் கூறிய செவிலி 'அவள் இல்வாழ்க்கை நலம் ஒருபுறம் இருக்க அவன்