பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங். வேங்தற் குற்றுழிப் பிரிவு க0 க. வெகுண்டு மழை பெய்யுமாயின் தனித் திருக்கும் அவள்

  • * 輯 # - (தலைவி) எவ்வாறு பொறுக்க முடியும்? அவளைச் சொல்லுகின்றதென்! எனக்கும் ஆற்றுதல் அரிது என்று தலைவன் தலைவியின் துயரை நினைந்து பின் பனிக்கு இரங்கின ள்.

7. இளவேனில் கண்டின்ன லெய்தல் (322. வாழும்படி) 'மேன்மேலும் நிறம் பெற்று இருளா நின்ற. இக் குயில்கள் இந்த மாம்பொழிலில் வண்டுகள் சூழப் பட்ட அரும்பிடத்தே சுற்றும் வந்து பற்றின; இனி உயிர் வாழுமாறு ஒன்றுங் கண்டிலேன்' என்று தலைவி இள வேனில் கண்டு வருத்த முற்ருள். (இக் கிளவி ஐந்தும் (3 - 7) காலங் காட்ட வேண்டி இத் துறையுள் கூறின ரென்பது கருத்தாகக் கொள்க.) 8. பருவங் காட்டி, வற்புறுத்தல் (323. பூண்ப தென்றே) தலைவன் தான் வருவதாகச் சொல்லிப் போன கார்ப் பருவம் வருதல் கண்டு கலங்கி நின்ற தலைவிக்கு, ஏந்திழையாய்! அழகிய பனி முகில்கள் வானிடத்துப் பரவா நின்றன. நம்முடைய தலைவருடைய தேர் இன்ருே நாளையோ இங்கே வரும் இனி உனக்குக் கவலை வேண் டாம் என்று தோழி கார்ப்பருவம் காட்டி வற்புறுத்தித் தலைவியைத் தெளிவித்தாள். 9. பருவமன்றென்று கூறல் (324. தெளிதரல்) காரும் வந்தது ; காந்தளும் மலரா நின்றன; காதலர் வாரா திருந்தது என்னே? என்று தலைவி கலங்கி நிற்க, சிற்றம்பலத்து ஆண்டவன் கூத்தாட முழவங்கள் முகில் போல முழங்கின; முழங்க, அவற்றை முழவம் என்று உணராது கார் என்று நினைந்து காந்தளும் அலர்ந்து பாம்பு போலும் துடுப்புகளைப் பரப் பி நின்றன. அதல்ை இது கார்காலம் அன்று என்று தெளிந்து கொள்வாயாக’ எனேத் தோழி (தலைவன் வரவு நீட்டித்