பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக, க ச . திருக்கோவையார் உரைநடை 4. ஆற்றமை கூறல் (335. வானக்கடிமதில்) தலைவியின் வருத்தங் கண்ட தோழி, தலைவர் பொருள் தேடக் காடு கடந்து செல்ல நினைக்கின் ருர் என்று நான் சொல்லும்போதே தலைவியின் கொங்கைகள் பொன்னைத் தாரா நின்றன. கண்கள் முத்தத்தைப் பெருக உண்டாக்கா நின்றன, அதனுல் இனித் துார ச் சென்று தேடும் பொருள் யாதுள்ளது?’ என்று தலைவ னுக்குத் தலைவியின் பிரிவு ஆற்ருமையைக் கூறினள். 5. திணை பெயர்த்துரைத்தல் (336. சுருள் தரு) இருண்ட பொழிலிடத்து இன்னுயிர் போல இனியராய் ஒன்றுபட்டு வந்து கூடி நமக்குச் சொன்ன அருளைப் புலப்படுத்தும் இனிய சொற்கள் எல்லாவற் றையும் மறந்து தாம் (காவலர்) அரும் சுரம் சென்ருே தீவினை யேற்குப் பொருளைத் தரத் தொடங்குகின்றது ? இது தகுமோ ? என்று பிரிவு நினைத்து, பாலை நிலத்த கிைய தலைவனை மருத நிலத்தளுக்கித் தலைவி தோழிக்குப் புலந்து கூறினள். 6. பொருத்த மறிந்துரைத்தல் (337. மூவர்கின்) இங்ங்னம் தினை பெயர்த்துக் கூறின தலைவிக்கு, *தில்லை அம்பலத்தின் சீரைப் புகழாத தீவினையார் சென்று தங்கும் நரகம் போன்ற அழலையுடைய காட் டிற்குப் போவார் போன்று இருந்தார் நம் காதலர் (தலைவர்) இனி நாம் என்ன வார்த்தையை அவருக்குச் சொல்வது ?' என்று தோழி மனம் நொந்து சொல்லாது பொருளுக்காகப் பிரிவோணும் தலைவனது கருத்தின் பொருத்தம் அறிந்து மனம் நொந்து தலைவி மருளக் கூறின ள். -

  1. (நம் மேல் காதலாய் இருந்தும் இக்காட்டிலே தலைவர் போவது ஒரு காரியத்தைக் கருதி, அக்காரியம்

முடியும் அளவும் நாம் ஆற்றியிருத்தல் அன்றி வேறு என் செய்வது? காதலர் கடிது மீள்வர் என்பது கருத்து)