பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ ச. பொருள் வயிற்பிரிவு фЕ. В Бъ-. இவ்வாறு பனிவருழ் கண்ணுேடு அறிவழிந்து அவள் வருந்திய விடத்து நீ துன்பம் அடைவது என்ன காரணத்தால் வந்தது? யான் பிரியேன் என்று கூறி நீரைத் தெளித்துத் தலையளி செய்யத் தலைவி அறிவு பெற்று அறிவழிந்த காலத்தைப் பிரிந்த காலமாகவிே கருதி, நீர் நனி தாழ்த்து வரும் நாள் இதுவோ ? என்று கூறி வணங்கி நின்ருள். இனி என்னல் பிரிவு உணர்த்தல் அரிது. நீ உணர்த்தும் ஆற்ருல் உணர்த்துக என்று தோழிக்குத் தலைவன் தலைவியின் வாட்ட்ங். கூறினன். _ (துறந்தார் கருதுவதாகிய மறுமை யின்பமும் அரசர் கருதுவதாகிய இம்மையின்பமும் அவரிருவருங் கருது வனவாகிய இப்பொருளிரண்டினையும் பொருள் முடிக்கு மென்று பொதுவகையாற் கூறினன் எனக் கொள்க.) 2. பிரிவுநினைவுரைத்தல் (333. வறியார்) இங்ாவனம் தலைவியின் வாட்டங் கேட்ட தோழி, 'பொருளில்லாதார் இருமையின்கண் வரும் இன்பமும் அறிய i ாேன உட்கொண்டு அருஞ்சுரம் ப்ோய் நம் தலைவர் நிலைபெறும் பெரிய பொருள் தேட நினையா நின் ருர்’ என்று தலைவிக்குத் தலைவனுடைய பிரிவு நிலையை உணர்த் தின ஸ். 3. ஆற்ருது புலம்பல் (334. சிறுவாள்) பிரிவு நினைவுரைப்பக் கேட்ட தலைவி, 'கண்ணுக்கு மை எழுதுகின்ற பொழுதும் தலைவர் கண்ணுக்குத் தெரிய மாட்டார் என்று கண்ணுக்கு மை எழுதுவதை விட்டு விட்ட என் தன்னிமயை அறிந்திருந்தும், சிறு உகிர் பட்டுப் படா மாத்திரையிலே பொடியாய்ப் போகிற குவளைப்பூ எறிதற்கு வாள் உறை கழித்தாற் போல அன்பர் (தலைவர்) பிரிவார் என்று கூறின ஸ் இந்தத் தோழியாகிய கொடியவள். இதற்கு யான் கூறுவது உண்டோ ?' என்று ஆற்ருது புலம்பினள். == திரு. - 8