பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்க உ திருக்கோவையார் உரைநடை வந்து அணுகினர் நம் தலைவர், இனி நமக்கு ஒருகுறை இல்லை என்று தலைவிக்கு அவள் பொலிவு அடையும்படி தலைவன் வரவை எடுத்துக் கூறினள். 16. மறவ்ாமை கூறல் (331. கருங்குவளை) வினை முற்றி வந்து தலைவியோடு பள்ளியிடத்தா கிைய தலைவன் நீர் வினையிடத்து எம்மை மறந்திரே என்ற தோழிக்கு, யான் பாசறைக்கண் தங்கிய இடத்தும் கண் முத்து இலங்க நின்ற இக்கிளியை ஒப்பாள் (தலைவி; வைகலும் ஒரு காலமும் என்னை விட்டு நீங்கிற்றிலள்) அதனுல் பிரிவில்லை. (வினை முடிந்த பின்பு இவளை நினைத்தலே அன்றி வினை முடிவதற்கு முன்னும் இவளைக் கருதிக் கொண்டுதான் இருந்தேன் என்று தலைவன் தோழியிடம் கூறினன்.) குறிப்பு: உக. வேங்தற்குற்றுழிப் பிரிவு என்னும் இவ்வதி காரம் 1. பிரிந்தமை கூறல் முதலான 1துேறைகளைக் கொண்டு முடிகின்றது. ப_ உச. பொருள் வயி ற்பி ரிவு பொருள் வயிற்பிரிவு என்பது குரவர்களால் படைக்கப்பட்ட பொருள் கொண்டு இல்லறம் செய்தால் அதல்ை வரும் பயன் அவர்க்கு ஆம், அத்துணையல்லது தமக்கு ஆகாமையால் தமது பொருள் கொண்டு இல்லறம் செய்தற்குப் பொருள் தேடப் பிரிவது. 1. வாட்டங் கூறல் (332. முனிவரும்) (முனிவரும்) (துறந்தாரும்) (மன்னரும்) (அரசரும்) கருதுவனவாகிய மறுமையும் இம்மையும் பொருளால் முற்றுப்பெறும் என்று பொதுவகையால் நான்'கூற அக் குறிப்பு அறிந்து தலைவியின் கண்கள் பனிவாரா நின்றன.