பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அ. அா திருக்கோவையார் உரைகடை நீட்டித்துப் பிரிவாராயினும், இப்பொழுது இவர் பிரியா ரென நான் அவர் பிரிவு இகழ்ந்து இருந்தேன்; முன் நின்று பிரிவுணர்த்தின் இவள் உயிர் தரியாள் என்று அவர் உண்ர்த்துதலை இகழ்ந்து போயினர்; அத்தன்மை ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் என்னை அழிவிக்கின்றன’ என்று கூறித் தலைவி மனம் வாடினள். 10. உருவு வெளிப்பட்டு நிற்றல் (341. சேனுந்திகழ்) இவ்வாறு தலைவி இகழ்ச்சி நினைந்து அழியா நிற்ப, பார்க்கும் திசைதோறும், கண்ணுகிய கரிய கயல்களையும் வாயாகிய செய்ய கனியையும் பொன்ல்ை இயன்ற பூனையும் நெருங்கிய முலைகளையும் உடைத் தாய் ஒரு பூங் கொடி தோன்றுகின்றது என்று தலைவியின் உருவை நினைத்து மேற்செல்ல மாட்டாது மீள லுற்றுக் காட்டிடை நின் ருன் தலைவன் . 11. நெஞ்சொடு நோதல் (342. பொன்னணி) மீள நினைந்த தலைவன், பின்னும் பொருள் மேற். செல்லா நின்ற உள்ளத் தனய் நின்று மீள மாட்டாது, பொன் திரளை ஈட்ட ஒட்டந்தரும் நெஞ்சமே அன்ன நடை போலும் நடையுடையாளின் மின்போலும் நுண்ணிய இடைக்கோ, அல்லது மேற்கொண்ட பொருளுக்கோ, இரண்டற்கும் அல்லவோ ? இந்த அழல் பொங்கும் காட்டில் போவதும் மீள்வதும் செய்யாது நிற். கின்ற இது யாதென்று சொல்வது ? இப்பொழுது விரை கின்றது எதற்காக ? இடைக்கு ஆகில் மீண்டு போக வேண்டும், பொருட்கா கில் மேலே போக வேண்டும். இரண்டும் செய்யாது காட்டிலே நீ நிற்பது யாது பெற வேண்டி' என்று தன் நெஞ்சொடு நோந்தனன். 12. நெஞ்சொடு புலத்தல் (343. காய்வயின்) இங்ங்னம் நெஞ்சொடு நொந்து நின்ற தலைவன் நாயினிடத்துள்ள நல்ல குணமும் இல்லாத என்னை நல்ல தொண்டகைக் கொண்ட பிரானுடைய சிற்றம் I.