பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. பரத்தையிற் பிரிவு க உடு. வியை அடைந்தன. அப்புலவி நோக்கிற்கு எதிராகக் காத லன் தலைவியை நோக்கத் தலைவியின் முகம் ஆகிய மடுவிற் குவளைப் பூக்கள் மலர்ந்து இருண்டு நெருங்கின. இங் ாவனம் காதலன் எதிர் நோக்கத் தலைவியின் சிவப்பாறி முகமலர்ந்தமையை அவ்விடத்துக் கண்டவர் தம்முட் கூறினர் 13. கால நிகழ்வு உரைத்தல் (364. வில்லிகை) பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுல் ஏற்பட்ட ஆற்ருமையைத் தலைவி நீக்காதிருப்ப, வண்டுது மல் லிகைப் போதாலும் அந்திப் பிறையாலும் கங்குற் பொழுதாலும் ஆற்ருளுய்த் தலைவன் புகுதா நின்ருன். இனி நீ (தலைவி) புலக்கற் பாலை அல்லை என்று வாயி: லோர் (உழையர்) கூறினர். 14. எய்தல் எடுத்து உரைத்தல் (365. புலவி) பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் பூப்பு நிகழ்ந்த தலைவியின் புலவி தீர அவளுடைய சிற்றடியைத் தன் சென்னியிற் சேர்த்து அப்புலவி நீங்கக் கலவிக் கடலுள் அவளது துகிலைப் பற்றி, எயிருகிய (பற்களாகிய) ஒளி பொருந்திய முத்தின் கண் நிறைந்துள்ள நீராகிய மது வைப் பருகி அவள் கொங்கைகளைப் பெறலாகி மகிழ் வுற்ருன். இது நாயகன் அன்புடைமையும், நாயகி புலவிச் செவ்வி அறிந்து காமச்சுவை மதுவுண்டு அவளுள்ளத்தே மகிழ்ச்சியும் கூறினவாறு. 15. கலவி கருதிப் புலத்தல் (366. செவ்வாய்) புலவி தீர்த்து இன்புறப் புணரப்பட்டு மயங்கா நின்ற தலைவி, இவ்வாறு நமக்கு அருளிய அருள் ஒரு. ஞான்று பிறர்க்கும் ஆம் என ஒன்றினை உட்கொண்டு நெட்டுயிர்ப்போடு பொருமி அழுது, பின் னும் அவளுேடு: கலவி கருதிப் புலவர் நின்ருள்.