பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. பரத்தையிற் பிரிவு அ. உ. அத தலைவியை விட்டுப் பரத்தையர் மாட்டு அகன்றதை அறியாத விறலியும் வாணனும் வந்து நிற்க, தலைவி நம்மை இவர் நகையாடி வந்தார் என்று முனிந்தாளாகத், தோழி இவர்கள் தலைவன் செயலை அறிந்தார்கள் அல் லர் என்றும், தலைவர்க்கு இயல்பு நம்மிடத்து வருதலும் அவரிடத்துச் சேறலும் எனவும் இயல்பு சொல்லுதலால் தலைவியின் சிவப்பு ஆற்றுவித்தாளாம். 25. தோழி இயற்பழித்தல் (376. திக்கின்) பாணன் வரவுரைத்த தோழி, இவள் (தலைவி) வருந்தத் தலைவன் அயலாரிடத்துவைகுதலால் தக் கிருந்திலன் (தகுதியுடையவனுய் இருந்திலன்) என்று குறை கூறினள். குறிப்பு: அல்குதல் - தங்குதல். இனி அயல் வயின் கல் குதலால், ஆயல்வயின் அல்குதலால் என இரு வழியும் பிரியும். கல்குதலால் எனக் கொண்டால் தலைவன் நல்க வேண்டுமிடத்து கல்காமையாலும் வேண்டாத இடத்து கல்குதலாலும் தகுதி யுடையவன் அல்லன் என்றபடி, 26. உழையர் இயற்பழித்தல் (377. அன்புடை) இங்ங்னம் தோழி, தலைவனை இயற்பழித்துக் கூறக் கேட்டு 'தன் பெடை நையத் தன் தகுதி கெட்டு அன்னம் சலஞ்சலத்தின்பெடை மேல் கிடந்து உறங்கும் அதுபோல் தன் மாட்டு அன்புடைய நெஞ்சத்தை உடைய இவள் (தலைவி) மயங்கப் பரத்தையர் மாட்டுச் சென்றுள்ள தலைவன் வரம்பிலன் (தகவிலன்) என்று உழையர் தலைவனை இயற் பழித்துக் கூறினர். (அன்புடைய தன் பெடை வருந்த அன்பில்லாத தன் மரபுக்குப் பொருந்தாத சலஞ்சலச் சங்கின் பெடை உடனே அன்னம் துயில்கின்றவாறு, தன் நாயகி வருந்த, தனக்கு அன்பில்லாதாரும் தன் மரபுக்குப் பொருந்தா தாரும் ஆகிய பரத்தையருடனே தலைவன் உறைவது அவனுடைய தகுதியின்மையைக் காட்டுகின்றது என்று கண்டவர் கூறினர். திரு. - 9